RENAULTக்கான வர்த்தக நாம தூதுவராக சங்கக்கார

 

Associated Motorways Private Limited (AMW) இன் பங்குடமையுடன் கவர்ச்சிகரமான, புத்தாக்கம் மிக்க, கட்டுப்படியான விலையிலான Renault உற்பத்தியான Renault KWID ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் பின்னர், வாகன மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கு, மகிழ்வளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரமான குமார் சங்கக்காரவை இலங்கையில் அதன் வர்த்தக நாமத்தூதுவராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆர்வம் மற்றும் புத்தாக்கம் என்பனவற்றுக்குப் புகழ்பெற்ற இந்த வர்த்தக நாமங்களின் இணைவானது உலகளாவிய பிரபலத்தைக் கொண்டிருப்பதோடு, வெற்றிகரமான வரலாற்றையும் கொண்டிருக்கின்றது.  

சக்திவாய்ந்த புதிய, வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி முன்னேறுவதால் Renaultக்கு இலங்கைச் சந்தையானது, மிகவும் முக்கியமானதாகவுள்ளது. குமார் சங்கக்கார “வாழ்க்கையில் பேரார்வம்” எனும் Renaultஇன் அடிப்படை உறுதிமொழியியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இவ்விணைவானது, குமார் சங்கக்கார மற்றும் Renault என்பனவற்றின் பல்திறன் மற்றும் மரபு என்பனவற்றைப் பேண உதவுகின்றது. மக்களின் வாழ்வோடு ஒன்றிணையக் கூடிய வகையிலான, மக்கள் விரும்பக்கூடிய, கவர்ச்சிகரமான கார்களை வடிவமைப்பதன் மூலம், Renault தான் ஆற்றும் கருமங்கள் யாவும் சிறந்தவையே என்பதை உறுதி செய்கின்றது. 

இந்தப் பங்குடமையானது, இலங்கையில் அதனது வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தல் எனும் Renaultஇன் இலக்குடன் இணைந்ததாகவுள்ளது. அவர்கள் இலங்கையில், நாடெங்கிலும் தங்கள் பிரசன்னத்​ைத அதிகரிக்கத் திட்டமிள்ளதோடு, நாடெங்கிலும் உள்ள விற்பனைத்தரகர்களையும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். குமார் சங்கக்காரவுக்கு இலங்கையிலும் சர்வதேசத்திலும் உள்ள பிரபலமானது, நிச்சயமாக Renault KWIDக்கு புதிய மற்றும் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை இலங்கையெங்கும் அளிக்கும்.  

“இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, உலகெங்கிலும் உற்சாகத்தின் சின்னமாக Renault உள்ளது. எங்கள் வீதிகளில் புதிய வரவாக, தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள இந்த இளைய வர்த்தக நாமத்துடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்வடைகின்றேன். இலங்கையில் Renault ஐப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும், இலங்கையில் அதனது பயணத்தில் பங்கேற்பதிலும் நான் ஆர்வமாக உள்ளேன்” என்றார்.  

Associated Motorways Private Limited இன் முகாமைத்துவப் பணிப்பாளர் சமந்த ராஜபக்க்ஷ கருத்துக்கூறுகையில், “Renault குடும்பத்துக்கு குமார் சங்கக்காரவை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இப்பங்குடமையானது Renault வர்த்தக நாமங்களை நாடெங்கிலும் பிரபலப்படுத்தும் திட்டத்துக்கமைய காணப்படுகிறது. Renaultம், குமார் சங்கக்காரவும் உலகப் புகழ் பெற்றவர்கள்.

இந்த சாதகமான நிலையை மேலும் கட்டியெழுப்ப வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம்” என்றார். 

 


RENAULTக்கான வர்த்தக நாம தூதுவராக சங்கக்கார

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.