2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஆயுதத்தின் பாகம் மீட்பு

Thipaan   / 2017 மே 19 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

பச்சிலைப்பள்ளி பகுதியில் இன்று (19) அதிகாலை படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, துப்பாக்கியின் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (19) அதிகாலை ஏ-9 வீதியில் போக்குவரத்து பொலிஸாரை கண்காணிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த பொலிஸ் கார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதனையடுத்து இராhணுவத்தினரால் இச்சுற்றவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகமாலை  தொடக்கம் கச்சார்வெளி வரையான 3 கிலோமீற்றர் நீள தூரமும்  முகமாலை தொடக்கம் கிளாலி வரையான 3 கிலோ மீற்றர் தூர அகலத்தில் படையினர் சுற்றி வளைப்பினை மேற்கொண்டு தேடுதல் நடாத்திவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கியின் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலிருந்து சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X