2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர்களால் ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மக்கள்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 19 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமுர்த்தி மீளாய்வின்போது பயனாளிகள் நீக்கப்பட்டமை, வீட்டுத் திட்டத்துக்கான மணல் பெற்றுக்கொள்ள முடியாமை போன்றவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக சமுர்த்தி உத்தியோகத்தர்களால் அழைத்து வரப்பட்டே, இப்போராட்டத்தில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டோம் என சிறிதரனுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக, கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம், இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளியிடங்களில் இருந்து பொருமளவான மக்கள் பஸ்களில் ஏற்றிக்கொண்டுவரப்பட்டனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

சமுர்த்தி மீளாய்வின்போது பயனாளிகள் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சமுர்த்தியை மீள வழங்குவதற்கு விண்ணப்படிவங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளது என இரவு (18) தொலைபேசியூடாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தமைக்கு அமையவே இங்கு வந்தோம். இப்போராட்டம் குறித்து எமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதில் அரசியல் ரீதியாக பேஸ்புக்கில் வருகின்ற கருத்துக்கள் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது என தெரிவித்ததுடன், போராட்டத்தில் கலந்து கொள்ளாது அங்கிருந்து அகன்று சென்றனர்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .