2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பட்டிக்குடியிருப்பில்; யானைகள் அட்டகாசம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பட்டிக்குடியிருப்பு பிரதேசத்தில் காட்டு யானைகள் வீடுகளுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தை நம்பி வாழும் இக்கிராம மக்கள் உற்பத்தி பொருட்களை வீடுகளில் வைத்தீருக்கும் போத அவற்றை உண்பதற்காக காட்டு யானைகள் வீடுகளுக்குள் புக முற்படுவதாகவும் இதன் காணரமாக அப் பகுதியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாலையானதும் குடிமனைகளுக்குள் வரும் யானையை விரட்ட முடியாதுள்ளதாகவும் யாiயை விரட்டும் போது அது மக்களை நோக்கி வருவதாகவும் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மின்சார வசதிகள் இன்மையால் இரவு நேரங்களில் யானையை அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமது கிராமத்தை சூழ மின் வேலி அமைக்கும் பட்சத்திலேயே தாம் நிம்மதியாக வாழ முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .