2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பஸ் சேவைக்காக காத்திருந்து நம்பிக்கை இழந்த மக்கள்

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு - புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம், தேராங்கண்டல் ஆகிய கிராமங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதாக, மேற்படி கிராமங்களின் மக்கள் தெரிவித்துள்ளனர்.

புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம், தேராங்கண்டல்  ஆகிய கிராமங்கள் வழியாக துணுக்காய்க்கான பஸ் சேவைகள் நடத்தப்படாமல், கடந்த பத்தாண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் உயரதிகாரிகளாலும், ஏமாற்றப்பட்டு வருவதாகவும், மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பத்தாண்டுகளாகப் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும், மேற்படி கிராமங்களுக்கு பஸ் சேவைகள் நடத்தப்படாததன் காரணமாக, மல்லாவி ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி பொது வைத்தியசாலை என்பவற்றுக்குப் போக்குவரத்து செய்வதில், தொடர்ச்சியாக நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், அக்கிராமங்களின் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இக்கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய பொருள்கள் மல்லாவி, கிளிநொச்சி சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கு விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள மக்கள், மல்லாவி, கிளிநொச்சி நகரங்களுக்கு உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனரெனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பஸ் சேவைகள் நடைபெறும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதாக, இக்கிராமங்களின் மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .