2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வாகன விபத்தில் இராணுவத்தினர் உள்ளிட்ட 10 பேர் காயம்

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

மன்னார்-செட்டிகுளம் ஏ-14 வீதியில்  முதலியார்குளம் என்னுமிடத்தி;ல் இன்று ஞாயிறு அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவத்தினர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்போது இவர்கள் செட்டிகுளம்  அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் பயணம் செய்த ரக் வண்டியும் தென்னிலங்கையைச் சேர்ந்த பொதுமக்கள் பயணம் செய்த மோட்டார் காரும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதியில் படுத்திருந்த மாடுகள் வாகன சத்தம் கேட்டு குறுக்குமாறாக ஓடியதினால்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகவும் இதில் இரண்டு மாடுகள் மோதுண்டு இறந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--