2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மன்னாரில் 11 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; சந்நேகநபர் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 10 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

தலைமன்னார் பிரதான வீதி சின்னக்கருஸல் கிராமத்தில் 11 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி சிறுமி நேற்று வியாழக்கிழமை பாடசாலை முடிவடைந்த நிலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது குறித்த நபரினால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உரிய பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நாளை சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0

  • IBNU ABOO Saturday, 11 June 2011 03:34 AM

    இது சரிபட்டுவராது. உடனடியாக சட்டம் திருத்தப்பட வேண்டும். மந்திரிமாரின் பிள்ளைகளுக்கு இப்படி நடந்தால் கரிசனையாக சிந்திப்பார்கள்.

    மரண தண்டனை தவிர மாற்றுவழி கிடையாது. களவுக்கு இஸ்லாமிய சரிஆத் தண்டனை கையை வெட்டுவது . இதனால் தான் இஸ்லாமிய நாடுகளில் திருடுதல் மிக அபூர்வம் . சட்டம் இளக்காரமாக இருப்பதால்தான் எதையும் செய்வதற்கு துணிகிறார்கள் இந்த கயவர்கள். காமுகர் நெஞ்சில் நீதி இல்லை. அவர்க்கு தாயென்றும் தாரம் என்றும் பேதமில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .