2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

150 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்புக்கள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 26 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}-எஸ்.றொசேரியன் லெம்பேட்


உலக நீர் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட தேசிய நீர்வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச் சபையானது மன்னார் பள்ளிமுனை 41 வீட்டுத்திட்டம், 49 வீட்டுத்திட்டம், 50 வீட்டுத்திட்டம், கோந்தைப்பிட்டி கிராமம் ஆகியவற்றுக்கு  உள்ளக குடிநீர் இணைப்புக்களை புதன்கிழமை (26)  வழங்கியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி கிராமங்களில் உள்ளக குடிநீர் இணைப்பிற்காக விண்ணப்பித்த 150 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் நகரசபை உறுப்பினர்களான எஸ்.டிலான், ஆர்.குமரேஸ், ஏ.மெரினஸ் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .