2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி நகர பகுதிக்கு அண்மையில் பாரிய மண் குழி

Kogilavani   / 2010 நவம்பர் 16 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி நகரப்பகுதிக்கு அண்மையாகவுள்ள பொது மருத்துவமனையை அண்டிய பகுதியில் பாரிய மண் குழியொன்று மண் அகழ்வின் மூலம் ஏற்பட்டுள்ளது.

சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இருபது அடி ஆழம்வரையான இந்தப் பாரிய குழியில் பெருந்தொகையான மண் சட்ட விரோதமான முறையில் அகழப்பட்டுள்ளது.

தனியாருக்குச் சொந்தமான மூன்று காணிகளில் இந்தச் சட்ட விரோத மண் அகழ்வு நடைபெற்றுள்ளது. இந்தக் குழியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட டிப்பர் லோட் மண் அகழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போது இந்தப் பாரிய குழியில் மழை நீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைவிட இந்தப் பாரிய மண் குழியைச் சீர் செய்வதற்கு இம் மண் குழியில் இருந்து எடுக்கப்பட்ட  அதேயளவு மண்  தேவைப்படும் எனவும் இதை அரசாங்கமே செய்து தரவேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட காணி உரித்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--