2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

திருட்டு சம்பவம் தொடர்பில் கைதான பெண்னை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்ஜெனி)

மன்னார் தட்சனா மருதமடு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணொருவரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான்; திருமதி கே.ஜீவரானி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

மன்னார் தட்சனா மருதமடு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள்  கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி களவாடப்பட்டிருந்தன.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டு உரிமையாளர்கள்  மன்னார் பொலிஸில் முறையிட்டபோது, பொலிஸார் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரை கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியபோது மேற்படி பெண் வழங்கிய தகவலின்படி தங்க நகைகள் சில மீட்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X