2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

வவுனியா, பாக் வீதியில் தங்கியுள்ள அதிரடிப்படையினர் வெளியேற இணக்கம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 03 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா, பாக் வீதியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபை கட்டிடத்தில் நிலைகொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேற இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அந்த இடத்தில் தீயணைப்பு படைப்பிரிவு அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக வவுனியா நகர சபைத் தலைவர் ஜி.நாதன் தெரிவித்தார்.

வவுனியா நகரம் 1500 கோடி ரூபாய் செலவில் நவீனமயப்படுத்தப்படவுள்ளது. அதற்குரிய திட்டங்கள் யாவும் தயாரிக்கப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநர் நகர சபை மைதானத்தினை புனரமைத்து ஸ்ரேடியம் அமைக்க தனது நிதியிலிருந்து 36இலட்சம் ரூபாயினை வழங்கியுள்ளார்.

நகரசபை வாசிகசாலையில் சிறுவர் பிரிவு ஆரம்பிக்க வெளிநாட்டு நண்பர் மூலம் 10 மில்லியன் கிடைத்துள்ளது. வவுனியா நகரில் இன்னும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .