2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

'இரு தேசியப்பட்டியல் உறுப்புரிமை பகிரப்படல்வேண்டும்'

Gavitha   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு தேசியப்பட்டியல் உறுப்புரிமையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பகிரப்படவேண்டும்' என செல்வம் அடைக்கலநாதன் நேற்று வியாழக்கிழமை (20) தெரிவித்துள்ளார்.

'நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு அமோக ஆரவை தந்துள்ளதுடன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தையும் வழங்கியுள்ளனர்.

இந்த வகையில், வாக்களித்த மக்களுக்கும் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் வெற்றுக்கோசமிடும் சில கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் இன்று நல்லதொரு பாடத்தை புகட்டியுள்ளனர். இதனை உணர்ந்து, மழைக்கு முளைக்கும் காளான்களான சில அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமது நிலைமையை எண்ணிக்கொள்ள வேண்டும்' என்று அவர் கூறினார்.

'இந்நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு, தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், இரு தேசியப்பட்டியில் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் வடக்கு கிழக்கில் களத்தில் நின்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களின் கடும் பிரயத்தனமாக உள்ளது.

எனவே, இரு தேசியப்பட்டியலையும் தமிழரசுக்கட்சி தனது அங்கத்தவர்களுக்கு வழங்காது, ஏனைய அங்கத்துவக் கட்சிகளாக உள்ள மூன்று கட்சிகளில் எவராவது ஒருவருக்கு ஒரு தேசியப்பட்டியல் உறுப்புறுரிமையை வழங்க வேண்டும்.

இதன் மூலமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் உட்கட்சி பூசல் நிலவுவதாக தமிழர்களிடம் பொய்ப்பிரசாரம் செய்யும் உதிரிக்கட்சிகளுக்கு வாய்ப்பூட்டு போட முடியும்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .