2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

இசை நிகழ்வில் குழப்பம்; பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 6 பேர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா நகரசபை மைதானத்தில்  இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பார்வையாளர்கள் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.  நேற்றிரவு 9.30 மணியளவில் இசை நிகழ்ச்சி ஆரம்பித்து அரை  மணி நேரத்தில் நிறைவுற்றபோது குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரவு பத்து மணிக்கு மேல் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறப்படாததினால் நிகழ்ச்சியை இடைநிறுத்தம் செய்ய வேண்டிய நிலையேற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மேடையிலிருந்த பாடகர்களை நோக்கி தாக்குதல் இடம்பெற்றது. ஒலிபெருக்கி கருவிகளுக்கும் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நிகழ்ச்சியை பார்வையிட வந்த இளைஞர்களில் அதிகமானவர்கள் மதுபோதையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட அரசினர் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக   வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .