2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

விமானப்படையினரின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி சைக்கிளோட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

விமானப்படையினரின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, வவுனியாவிலிருந்து இன்று புதன்கிழமை நடைபெற்ற ஆண்கள் பங்குபற்றிய சைக்கிள் ஒட்டப்போட்டியில் 115 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

காலை 7 மணிக்கு வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட சந்தியிலிருந்து ஆரம்பித்த இந்த சைக்கிளோட்டப் போட்டி,  கண்டி வீதி வழியாக அநுராதபுரம் நோக்கி புறப்பட்டது.    நாளை அங்கிருந்து கண்டியை நோக்கி இந்த சைக்கிளோட்டம்  ஆரம்பிக்கும். இப்போட்டி மூன்று தினங்களின் பின்னர் களுத்துறையில் நிறைவுபெறும். விமானப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் சிரேஷ்ட உயர் அதிகாரிகள் சைக்கிளோட்டப் போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X