2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வவுனியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டிய 8 வர்த்தகர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

சூழல் மாசடைதல் தடைச் சட்டத்தின் கீழ் பொது இடத்தில் குப்பைகளை போட்டார்கள் என்ற குற்றசாட்டின் பேரில் வவுனியா நகரைச் சேர்ந்த எட்டு வர்த்தகர்களுக்கு நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் தலா ஐயாயிரம் ரூபாய்  அபராதம்  விதிக்கப்பட்டது.

பொலிஸார் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். கடை குப்பைகளை உரியமுறையில் பேணாது  கடைக்கு முன்னால் பொது இடத்தில் வீசினார்கள் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும் என நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்றாட கழிவுகளை தினமும் சேகரித்து பொலித்தீன் பை ஒன்றினுள் போட்டு குப்பை அகற்ற வரும் நகரசபை வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும். அதேவேளை, வீட்டு கழிவு நீரை வீட்டுக்கு வெளியே வீதியில் விடுபவர்களுக்கும் வழக்கு தாக்கல் செய்யப்படும் என நகர பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X