விபத்தில் 6 பேர் படுகாயம்

- க.அகரன்

திருக்கேதீஸ்வரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் விபத்துள்ளாகியதில், அதில் பயணித்த 6 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், வவுனியா வைத்தியசாலையில் இன்று (14) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சிவராத்திரி வழிபாடுகளை முடித்துத் திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் 6ஆம் ஒழுங்கைப் பகுதியில், வவுனியாவில் இருந்து கற்பகபுரம் நோக்கி சென்ற பஸ்ஸ_டன் குறித்த வான் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், வானில் பயணித்த குழந்தை உட்பட 6 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


விபத்தில் 6 பேர் படுகாயம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.