‘வேறு கட்சிகளைத் திருப்பி அனுப்புங்கள்’

-சண்முகம் தவசீலன்

“தமிழர்களின் ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் வேறு கட்சிகள் வரும்போது மறித்து திருப்பி அனுப்புங்கள். அப்பதான் தெரியும் முல்லைத்தீவு மக்கள் எப்படி என்று”  என, வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தின் கீழ் தமிழரசு கட்சி சார்பில் முல்லையூர் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு, தீர்த்தக்கரை பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (05) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தந்தை செல்வாவின் காலத்தில் எத்தனை ஒப்பந்தங்கள் கிளித்தெறியப்பட்டுள்ளது. தமிழரசு கட்சி தமிழ் என்ற நோக்கோடு தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஒப்பந்தமே செய்யவில்லை என்றால் முன்னர் வைத்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டுள்ள நிலையில் எதுவித ஒப்பந்தங்களிலும் கையெழுத்து இடமால் தமிழர்கள் உங்கள் ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கின்றோம் என்ற நம்பிக்கையில் அடிப்படையில் ஆதரிக்கப்பட்டது.

 

“தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் உருவாக்கப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர் ஏற்கெனவே மாத்தையா என்ற போராளி அவர்களின் தலைமையில் ஓர் அரசியல் பிரிவு உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் தெரியும். ஏன் அதனைவிட்டுவிட்டு பின்னர் அரசியல் கட்சிகள் நான்கை எடுத்து அவற்றுக்குள் உள்ள பிள்ளைகளை கழைந்து கட்சிகளை உள்வாங்கி அவர்களின் பொறுப்பில்தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை விட்டுள்ளார்.

“அரசியல் பகுதியை விடுதலைப் புலிகளின் தலைமை பார்த்துக்கொண்டிருக்கும் அதேவேளை, தாங்களும் கண்காணிப்பம் இந்தக் கூட்டமைப்புக்குள் தங்களின் ஆட்களை விட்டு செய்யதேவை இல்லை என்ற நிலையில்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை ஆழ புரிந்துகொண்டால், உங்களுக்கு விளங்கும் தலைவர் பிரபாகாரன் அவர்களால் காட்டப்பட்டதுதான் கூட்டமைப்பு. அன்று அவர் நினைத்திருந்தால் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தை விட புதிய சின்னத்தை உருவாக்கி இருக்கலாம்.

“புதிய கட்சியை உருவாக்கி இருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சியின் வீட்டுசின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சொன்னார். இவ்வாறுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் அமைந்துள்ளது. 

“இந்த அரசாங்கம் வடக்கு – கிழக்கைப் புறக்கணிக்க முடியாது. 2026ஆம் ஆண்டு வரை வட்டி கட்ட முடியாமல் திண்டாடிக்ககொண்டிருக்கும் அரசாக காணப்படுகின்றது. 

எங்கள் மக்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி உங்களை நாடி வருகிறது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வருகின்றது. ஹம்பாந்தோட்டையில் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடலாமா? ஆனால் இங்கு தென்னிலங்கை கட்சிகள் வந்து தமிழ்மக்களையே எடுத்து போட்டி போடுகின்றார்கள். இன்று எங்கள் மாவட்டத்தில் வெலிஓயாபகுதியில் கூட கூட்டமைப்பினால் ஒரு சிங்கள இனத்தவரை  பிடிக்கமுடியவில்லை.

“இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைப்பதற்காக சில புல்லூருவிகள் வந்து ஊடுருவி தமிழர்களின் ஒவ்வொரு பக்கத்திலும் புகுந்து வாக்குகளை உடைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.  இந்த உடைப்பை நாங்கள் விடக்கூடாது” எனத் தெரிவித்தார்.


‘வேறு கட்சிகளைத் திருப்பி அனுப்புங்கள்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.