2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 22

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1838: போர்த்துக்கலில் மன்னன் பெர்னாண்டோ, ஆண் வாரிசின்றி இறந்ததால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி சிவில் யுத்தத்திற்கு வழிவகுத்தது.

1707: மத்தியத் தரைக்கடலில் சிசிலி தீவுக்கருகில் நான்கு பிரித்தானிய கப்பல்கள் தவறான முறையில் செலுத்தப்பட்டதன் காரணமாக கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கான படையினர் பலியாகினர்.

1784: அலாஸ்கா பிராந்தியத்தின் கோடியாக் தீவில் ரஷ்யா கொலனியொன்றை ஆரம்பித்தது.

1797: பாரிஸில் 1000 மீற்றர் (3200 அடி உயரத்திலிருந்து)  அந்ரே ஜாக் கார்னரின் என்பவர் முதல் பரசூட் மூலம் குதித்தார். உலகின் முதலாவது பரசூட் குதிப்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

1877: ஸ்கொட்லாந்து சுரங்க விபத்தில் 207 பேர் பலி.

1924: மேடைப்பேச்சாற்றலை வளர்க்கும் சர்வதேச அமைப்பான 'டோஸ்ட்மாஸ்ட்டர் இன்டர்நெஷனல்' ரால்ப் சி ஸ்மெட்லியினால் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1944: பிரித்தானிய விமானப்படை விமானங்கள் ஜேர்மனியின் கசெல் நகரில் தாக்குதல். 10 ஆயிரம் பேர் பலி.

1953: பிரான்ஸிடமிருந்து லாவோஸ் சுதந்திரம் பெற்றது.

1957: வியட்நாம் யுத்தத்தில் முதல் அமெரிக்க படைவீரர் பலி.

1960: பிரான்ஸிடமிருந்து மாலி சுதந்திரம் பெற்றது.

1962: கியூபாவில் சோவியத் அணுஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி அறிவித்தார்.

1963: கனடாவின் தேசிய கொடியை நாடாளுமன்ற பல்கட்சி குழுவொன்று வடிவமைத்தது.

1975: சோவியத் யூனியனின் வனேரா9 விண்கலம் வெள்ளி கிரகத்தில் தரையிறங்கியது.

2007: அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய தாக்குதல்.

2008: சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா சந்திரனுக்கு ஏவியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .