8 கோடி ரூபாவை விபசாரத்திற்காக செலவிட்டு திருட்டில் சிக்கிய செக்ஸ் அடிமை
07-04-2012 11:45 PM
Comments - 1       Views - 1399
விபசாரத்திற்காக 400,000 ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் 8 கோடி இலங்கை ரூபா) செலவழித்த நபர் ஒருவர்  தனது பாலியல் தேவைக்காக பணம் திருடிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த  டெரிக் கிறீன் எனும் 66 வயது நபர் இவ்வாறான சிறை தண்டனையை எதிர்கொண்டுள்ளார். 

இங்கிலாந்தின் சர்ரே பிராந்தியத்தில் தனது மனைவியால் நிர்வகிக்கப்படும் உப தபால் அலுவலகத்தில் தபால் இலிகிதராக தொழிற்புரியும் இவர் இப்பணத்தை திருடி, மணித்தியாலத்திற்கு 160 ஸ்ரேலிங் பவுண்கள் வரை அறவிடும் விபசாரிகளுக்காக செலவிட்டுள்ளார்.

பாலியல் அடிமையான இவர், தனது பாலியல் நடத்தைகளுக்குத் தேவையான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக தவறான வழிகளில் பணத்தை தேடுபவராக மாறத் தொடங்கினார். இதற்காக அவர் தனது வீட்டை 10 வருடங்களுக்கு 305,000 ஸ்ரேலிங் பவுண்களுக்கு அவர் விற்றார். 

அப்பணத்தை செலவிட்டு முடிந்தபின்  2008 டிசெம்பர் மற்றும் 2009 செப்டெம்பர் காலப்பகுதியில் 100,000 ஸ்ரேலிங் பவுண் கடனாளியாக இருந்த நிலையில் திருட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

திருட்டு, தவறான கணக்குப் பதிவு  போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

கிறீனின் மனைவியான சுசான்னாஹ் பிராம்லீ சாட்சியமளிக்கையில்,  டெரிக் கிறீன் தனது கணினியில் பொய்யான கணக்கு விபரங்களை பதிவு செய்திருந்ததாகவும் ஆனால் அவர் வேலைக்கு சமுகமளிக்காத தினத்தில் கணக்காய்வு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டபோது அவரின் திருட்டு அம்பலமானதாகவும் தெரிவித்தார்.

சுமார் ஒருவார காலம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்பின் கிறீனுக்கு 17 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

"8 கோடி ரூபாவை விபசாரத்திற்காக செலவிட்டு திருட்டில் சிக்கிய செக்ஸ் அடிமை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
ikmsm 09-04-2012 11:38 AM
"நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது." அல்-குர்ஆன் 17:32
Reply .
0
1
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty