பாடசாலை மாணவர்களுக்கு 17 வயது வரை பரீட்சைகள் இல்லை

பாடசாலை மாணவர்களுக்கு, 17 வயது வரை எந்தவொரு பரீட்சையையும் நடத்தாதவாறு, பாடசாலைக் கல்வித் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தான ஆலோசனைகளை முன்வைப்பது தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த யோசனை தொடர்பான சமூக உரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்குத் தயாராக இருப்பதாகவும், அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.அபேரத்ன கூறினார்.

பாடசாலைக் காலத்தில், மாணவர்கள் அதிகளவு பரீட்சைகளுக்குத் தோற்றுவதால், அவர்கள், மன அழுத்தம், பதற்றம், மன இறுக்கம் ஆகியவற்றுக்கு உள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு, 17 வயதுக்குப் பின்னர் மாணவர்கள் தோற்றும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

 • A.kaleelur Rahman Thursday, 14 June 2018 07:17 AM

  தவறானது மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கும்

  Reply : 0       0

  Manikkam Elango Friday, 15 June 2018 02:24 PM

  பரீட்சை முறைமை மாணவர்களை மாத்திரமல்ல ஆசிரியர்களையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே இம்முறைமை வலுவான மாற்றுத்திட்டத்தினூடாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

  Reply : 0       0


பாடசாலை மாணவர்களுக்கு 17 வயது வரை பரீட்சைகள் இல்லை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.