ஓகஸ்ட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு கணக்கு

78ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக இலங்கை வங்கி 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலத்தினுள் பிறக்கும் சகல குழந்தைகளுக்கும், ரண்கெகுளு கணக்குகளை திறந்து ரூ. 250 ஆரம்ப வைப்புத்தொகையை வைப்புச் செய்கின்றது. பெற்றோரில் ஒருவர் அல்லது பாதுகாவலர் குழந்தை பிறந்த திகதி தொடக்கம் மூன்று மாத காலத்தினுள் அண்மையிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.

இவ்வழங்கலுக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர் இத்தொகைக்கு மேலதிகமாக வைப்புச்செய்து முதலீட்டை அதிகரித்துக்கொள்வதற்கு விரும்பின், ஓகஸ்ட் 31 வரை அவர்கள் வைப்புச் செய்யும் தொகையை, 1,000 ரூாய் வரை இரட்டிப்பாக வழங்குவதற்கு உள்ளது.

இவ்வழங்கலைப் பெறுவதற்கு குறைந்தது 500ரூபாயை வைப்புச்செய்ய வேண்டும். இவ்வழங்கல் BOC Athfal சிறுவர் சேமிப்பு கணக்குக்கும் செல்லுபடியாகின்றது. இலங்கையின் வங்கியியல் தொழிலில் பிரதான வங்கியாக 78 வருடங்களாக கட்டியெழுப்பிய நம்பகத்தன்மையும் உறுதியான தன்மையும் உங்களது பிள்ளை நிதியியல் ரீதியில் உறுதியான எதிர்காலத்தை இலங்கை வங்கி கட்டியெழுப்பும் என்பதை அத்தாட்சிப்படுத்துகின்றது.  

இலங்கை வங்கி நாட்டின் உன்னதமான சிறுவர் சேமிப்பு கணக்காகிய ரண்கெகுளு சேமிப்பு கணக்குக்கு 1 சதவீத மேலதிக வட்டியை வழங்குகின்றது. பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆகக்கூடியது 500,000 ரூாய் வரை இலவச ஆயுள்காப்புறுதியும் இக்கணக்குடன் இணக்கப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் திறந்துள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆகக்கூடியது ரூபாய் ஒரு மில்லியன் வரை காப்புறுதி வழங்கப்படுகின்றது. (சம்பவம் நிகழ்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தொடக்கம் 5,000 ரூபாயை ஆகக் குறைந்த நிலுவையாக பேணியிருக்க வேண்டும்). விபத்து அல்லது குறித்த 10 பயங்கரமான நோய்கள் காரணமாக தனியார் வைத்தியசாலையில் ஒரு இரவுக்கு மேல் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஆகக்கூடியது ஒரு இலட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக்காப்புறுதியும் அரசாங்க வைத்தியசாலையாயின் 3 இரவுகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு 600 ரூாய் வீதம் ஆகக்கூடியது 30 நாட்களுக்கு வழங்கப்படும்.  

நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதுடன், சகல தரங்களிலும் வாழுகின்ற இலங்கையர்கள் தங்களது வாழ்வை மேம்படுத்திக்கொள்வதற்கு சேவையாற்றி தன்னை நிதியியல் ரீதியில் உறுதிப்படுத்திக்கொண்டு 78 வருடங்களுக்கு மேல் அனுபவத்துடன் இலங்கை வங்கியியல் தொழிலில் முன்னணி வகுத்து இலங்கை வங்கி நாட்டில் நம்பகமானதும் உறுதி வாய்ந்ததுமான வங்கி என்னும் நிலையை அடைந்துள்ளது.  


ஓகஸ்ட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு கணக்கு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.