HUAWEI P10க்கு EISA விருது

ஐரோப்பிய புகைப்பட மற்றும் ஒலி சங்கத்திடமிருந்து (European Image and Sound Association - EISA) இரு புதிய விருதுகளைப் பெற்றுள்ள Huawei Consumer Business Group (CBG), அதன் மூலமாக பெரும் கௌரவத்தை சம்பாதித்துள்ளது. HUAWEI P10ஆனது ‘EISA Smartphone Camera 2017-2018’ என்ற விருதை தனதாக்கியுள்ளதுடன், Huawei இன் P உற்பத்தி வரிசை, EISA இடமிருந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் வெற்றுள்ள விருதாகவும் இது மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்குப் புறம்பாக, HUAWEIWATCH 2ஆனது ‘EISA Wearable Device 2017-2018’ என்ற விருதையும் சம்பாதித்துள்ளது. நவீன பாணி, வலிமை மற்றும் விருதுகளை வென்றுள்ள சாதனங்களை அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் கொண்டுள்ள சிறப்பான வரலாற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள தரம், வடிவமைப்பு மற்றும் செயற்றிறன் ஆகியவற்றின் மீது Huawei கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஓர் அங்கிகாரமாக இந்த விருதுகள் அமைந்துள்ளன.  

நுகர்வோர் இலத்திரனியல் துறையின் முழுமையான அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வல்லுனர்களைக் கொண்டுள்ள EISA அங்கத்தவர்கள் Huawei இன் மிகச் சிறந்த உற்பத்திகளைப் பாராட்டியுள்ளனர். 2013ஆம் ஆண்டில் HUAWEI P6இன் உடன் ஆரம்பித்த Huawei P உற்பத்தி வரிசையானது, மிகவும் கவர்ச்சியான உற்பத்தி வரையறைகள், அழகிய வடிவமைப்பு மற்றும் இயல்பான பயனர் இடைமுகம் ஆகியவற்றின் பலனாக, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ‘மிகச் சிறந்த நுகர்வோர் ஸ்மார்ட்போன்’ என்ற விருதை தனதாக்கியுள்ளது.  

Leicaஇன் இணைப்பொறிமுறையுடன் 2017ஆம் ஆண்டில் அறிமுகமாகியிருந்த HUAWEI P10 அதன் கமெரா அனுபவத்துக்காக முதன்முறையாக ‘EISA Smartphone Camera 2017-2018’ என்ற விருதை தனதாக்கி விசேட இனங்காணல் அங்கிகாரத்தைச் சம்பாதித்துள்ளது. P உற்பத்தி வரிசைக்கு ஒப்பான மிகச் சிறந்த பயனர் அனுபவத்துடன் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள HUAWEI P10, புகைப்படவியல் மூலமாக தமது படைப்பாற்றலை வெளிக்காண்பிக்க விரும்புகின்ற பயனர்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் அவர்களுக்கு வழங்குகின்றது. முப்பரிமாண முக கண்டறிதல் (3D facial detection), எக்காலமும் நிலைபெற்றிருக்கும் புகைப்படங்களை வசப்படுத்தும் வலுவான ஒளித் தெளிவு மற்றும் எந்தவொரு பொருளாகவோ அல்லது உருவமாகவோ இருந்தாலும் அதிசிறந்த புகைப்படங்களை வசப்படுத்தல் போன்ற அதிநவீன மென்பொருள் சாதனங்களின் முழுமையான இணைப்பாக அவை அமைந்துள்ளன.  


HUAWEI P10க்கு EISA விருது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.