'இரவின் இளவரசி'
13-05-2014 01:43 PM
Comments - 0       Views - 1825

-பாலகிருஷ்ணன் திருஞானம்


உலகில் மிகவும் அரிதான  பூ வகைகளில் ஒன்றாகக் காணப்படும்  கடுப்புல் பூக்கள் புஸல்லாவை, ரஜஎல பிரதேசத்திலுள்ள வீடொன்றில்  மலர்ந்துள்ளன.

இந்நிலையில், இப்பூக்களை பார்வையிடுவதற்காக இரவு வேளைகளில் பொதுமக்கள் வந்தவண்ணமுள்ளனர்.

இந்தியா, இலங்கை, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்ற இப்பூக்கள், அப்பூச்செடிகளின் இலைகளிலேயே மலர்கின்றன. இவ்வாறு செடியில் 100 இற்கும் அதிகமான பூக்கள் மலர்கின்றன.  முழு நிலவு கால பகல் வேளைகளில் மொட்டுக்களாகி இரவு வேளைகளில்  படிப்படியாக மிக்க நறுமணத்துடன் இப்பூக்கள் மலர்கின்றன. இவ்வாறு மலர்ந்து 02 மணித்தியாலங்களின் பின்னர் இப்பூக்கள் வாடிவிடுகின்றன. இதுவே கடுப்புல் பூக்களின் சிறப்பம்சமாகும்.

இப்பூக்களை பூஜைகளுக்கும் இரவு வேளைகளிலேயே பயன்படுத்த முடியும். ஏனைய வேளைகளில் இதன் மொட்டுக்களையே பூஜைகளுக்கு பயன்படுத்த முடியும்.

மேலும், பெரும்பான்மையின மக்கள் இப்பூக்களை  புத்தபகவானுக்கு பூஜைக்காக பயன்படுத்துகின்றார்கள்.  வருடத்திற்கு ஒரு முறை மலரும் இப்பூக்கள்  வெசாக் காலத்தில் மலர்ந்திருப்பது  பௌத்தர்களுக்கு விசேடமாகும்.

இப்பூக்கள் 'இரவின் இளவரசி' நிலவிலிருந்து பூ எனவும் வர்ணிக்கப்படுகின்றன. இதில் 05 விதமான இனங்கள் இலங்கையில் காணப்படுவதாக தெரியவருகிறது."'இரவின் இளவரசி' " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty