உலகில் மிக வேகமாக பேசும் பெண்
07-07-2014 05:46 PM
Comments - 0       Views - 1524

உலகில் மிக வேகமாக பேசும் பெண் என்ற சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த பிரான் கெபோ என்ற பெண் நிலைநாட்டியுள்ளார்.

இவர், 3 குட்டி பன்றிகள் (திரி லிட்டல் பிக்ஸ்) என்ற கதையை 54.2 செக்கன்களில் வாசித்தே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதில் மொத்தமாக 603.32 சொற்கள் காணப்பட்டுள்ளன. இவர் பேசிய சொற்களில் 11 சொற்கள் மட்டுமே மீளவும் பேசப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

“நான் நகைச்சுவையில் சிறந்தவள். அதேவேளை, நான் ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் இருக்கிறேன். நான் இதுவரை 11 புத்தகங்களை எழுதி இருக்கிறேன்”   என அவர் மேற்படி கதையை வாசித்த கையோடு கூறியுள்ளார்.

இவர் இதுவரை 250 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். குட்மோர்னிங் அமெரிக்கா போன்றவை அவற்றில் முக்கியமானவை. அதேபோல், 1000 இற்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
" உலகில் மிக வேகமாக பேசும் பெண்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty