தயார்...
16-08-2014 11:15 AM
Comments - 0       Views - 2022

-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு நகரில் நீண்ட காலமாக மக்களின் பாவனைக்கு இல்லாமல் இருந்த வாவியை அண்டிய யாட் வீதிப் பிரதேசத்தை, நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பொழுது போக்கும் இடமாக மாற்றும் நிர்மாணப் பணிகள் முடிவுறும் நிலைக்கு வந்துள்ளன.

பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வாழ்வின் எழுச்சித்  திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபாய் செலவில், மக்களின் வேண்டுகோளுக்;கிணங்க அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ்சின் முன்மொழிவினால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

வாவிக்கரையை அண்டிய இப்பிரதேசத்தில் இருக்கைகளுடன் கூடிய 3 பொழுது போக்கு கூடாரங்களுடன் பச்சைப் புல் தரையுடன் கூடிய தோட்டங்களும்   நிர்மாணிக்கப்படவுள்ளதாக திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மாவட்ட செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டைப் பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் புராதன இடமாக உள்ளதனால் கச்சேரிப் பிரதேசத்துக்கு எதிரே செல்லும் யாட் வீதியை அண்டிய வாவிக்கரை பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

"தயார்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty