மிகப்பெரிய தலையணைச் சண்டை
06-10-2014 04:12 PM
Comments - 0       Views - 991

உலகிலே மிகப்பெரிய தலையணைச் சண்டை கடந்தவாரம் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுமார், 4,200 பேர் இணைந்து இச்சாதனையை நிகழத்தியுள்ளனர்.

அமெரிக்கா, கலிபோர்னியாவில் அமைந்துள்ள இர்வின் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்தே இச்சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

60 செக்கன்கள் தலையணை சண்டை நீடிக்க வேண்டுமென்பதே இச்சாதனையின் நிபந்தனையாக விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்குப்பற்றியவர்களின் தொகையை கணக்கிடுவதற்கு 100 தொண்டர்கள் தேவைப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சாதனையில் பங்குபற்றியவர்களுக்கு 4200 தலையணைகளும் 5,000 டீசேர்ட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிக்காகோ நகரில் 3,183 பேர் பங்குபற்றி நிகழத்தியிருந்த சாதனையை இச்சாதனை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"மிகப்பெரிய தலையணைச் சண்டை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty