தரமான பொருளே தாரக மந்திரம்: ரகுநாதன்
15-10-2014 06:21 PM
Comments - 0       Views - 1150

25 வருடங்களுக்கு மேலாக கட்டட நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய பொருட்களையும், வீட்டு பாதுகாப்பு மற்றும் அலங்கரிப்புக்கு அவசியமான பொருட்களையும் இறக்குமதி செய்து விநியோகித்து வரும் ரனியோ பிரைவேற் லிமிடெட், அன்று முதல் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்துக்கு பெறுமதியான பொருட்களை வழங்குவது எனும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. 
 
நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து, முகாமைத்துவ பணிப்பாளர் ரி.ரகுநாதன் கருத்து தெரிவிக்கையில், 
 
'நாம் 1987ஆம் ஆண்டு எமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தோம். முதலில் 5 ஊழியர்கள் மட்டுமே நிறுவனத்தில் பணியாற்றினார்கள். வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்துக்கு சிறந்த தரமான பொருட்களை வழங்குவதை அடிப்படையாக கொண்டு செயலாற்றி வரும் நாம், விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் உரிய முறையில் வழங்கி வருகிறோம். நாடு முழுவதும் எமக்கு 650க்கு மேற்பட்ட விநியோகத்தர்கள் காணப்படுகின்றனர்'.
 
'நாம் விநியோகிக்கும் பொருட்களை பொறுத்தமட்டில், எம்மிடம் Union, Teka, mbc, Raniyo, Woca, tucai, yale, cumi, pegler, corbin, magnum, Irwin, beargrip, Atkinson walker, pressol, mation, atlas போன்றன காணப்படுகின்றன. இவற்றில் Raniyo என்பது எமது சொந்த வர்த்தக நாமமாகும். இந்த தயாரிப்புகளில் pegler வகையை தவிர ஏனைய சகல வர்த்தக நாமங்களுக்கும் இலங்கையில் ஏக விநியோகத்தர்களாக நாம் திகழ்கிறோம். Union பூட்டுகள் என்பது இலங்கையில் மிகவும் நீண்ட காலமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை வென்ற பூட்டு வகையாக அமைந்துள்ளது. அத்துடன், பிணைச்சல்கள், கதவு கைப்பிடிகள் கதவு மூடும் அழுத்திகள் போன்ற பல தெரிவுகள் இந்த Union வர்த்தக நாமத்தில் காணப்படுகின்றன. பிரித்தானியாவின் வர்த்தகநாமமாக Union திகழ்வது குறிப்பிடத்தக்கது'
 
'இந்தியாவின் Magnum வர்த்தக நாமத்தில் நாம் இறக்குமதி செய்யும் பித்தளை கதவு பிணைச்சல்கள், கைப்பிடிகள் போன்றனவும் மக்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யம் பெற்றுள்ளன'
 
'சமையலறை சிங்க் வகைகள், மைக்குரோவேவ் அவன் வகைகள், மற்றும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களை கொண்ட Teka ஸ்பெய்ன் நாட்டு வர்த்தக நாமமாகும். மணல் கடதாசி வகைகள், துணி வகைகள் போன்றவற்றையும் நாம் இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறோம்'.
 
'பிரான்ஸ் நாட்டு வர்த்தக நாமமான, சில்லுகள் பொருத்தப்பட்ட தள்ளி திறக்கக்கூடிய கதவு வகைகளும் எம்மிடம் காணப்படுகின்றன. இவற்றை பொறுத்தமட்டில், இடவசதி குறைந்த வீடுகள் மற்றும் வியாபார தாபனங்களுக்கு இலகுவான முறையில் பொருத்திக் கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளன'. 
 
'வீடுகளிலும், வியாபார நிலையங்களிலும் நிலத்துக்கு தற்போது பலகையாலான மேற்பரப்பை கொண்டு அலங்கரிக்கும் நடைமுறை காணப்படுகிறது. இந்த பலகைக்கு டென்மார்க் நாட்டு வர்த்தக நாமமான woka மேற்பூச்சு பூசுவதன் மூலம் அவற்றை நீண்ட காலம் பழுதடையாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும்'. 
 
'நீர் மற்றும் வாயு இணைப்புகள் மற்றும் வால்வுகள் போன்றவற்றை கொண்ட உறுதியான தயாரிப்பு வகையான Peggler பிரித்தானியாவின் வர்த்தக நாமமாக அமைந்துள்ளது. இதுவும் எமது விநியோக கட்டமைப்பில் உள்ளடங்கியுள்ளது'. 
 
'எமது சொந்த வர்த்தக நாமமான Raniyo, தெரிவுகளில் தரமான பிணைச்சல்கள், பூட்டு வகைகள், கதவு தாழிகள் போன்றனவும், டைல்களை வெட்டும் சாதனம் மற்றும் கதவை சுயமாக தள்ளி பூட்டும் பிணைச்சல் (door closer) வகைகளும் இந்த வர்த்தக நாமத்தில் உள்ளடங்கியுள்ளன'.
 
'மேலும் எமது இறக்குமதி செய்யப்படும் வர்த்தக நாமங்களில் Presto நாமத்திலான வலுச்சாதனங்களுக்கான உதிரிப்பாகங்கள் (grill bits, plates), Tukai நாமத்திலான இணைப்புகள், Valencia நாமத்திலான பூட்டுகள், கதவு தாழிகள் மற்றும் கதவை சுயமாக தள்ளி பூட்டும் பிணைச்சல்கள் (door closer) போன்றன அடங்கியுள்ளன'
 
'எமது தயாரிப்புகள் நீண்ட காலமாக நிலைத்திருக்க காரணம், அவற்றின் மீது எமது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையாகும். எமது நிறுவனம் தாபிக்கப்பட்டது முதல் நேர்மையான, நியாயமான முறையில் சகல பொருட்களையும் கட்டுப்படியான விலையில் நாம் வழங்கி வருகிறோம். தற்போது எமது நிறுவனத்தில் சுமார் 48 ஊழியர்கள் வரை பணியாற்றுகின்றனர். இவர்கள் தொடர்ந்து தமது வாழ்வாதாரத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக அமைந்திருப்பது நிறுவனத்தின் நோக்கமாகும்'.
 
ரனியோ நிறுவனத்தின் மூலம் விநியோக்கிகப்படும் தயாரிப்புகள் சமீப காலத்தில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிரதான நிர்மாணப்பணிகளின் போது பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் மத்தளை விமான நிலையம், கொழும்பில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் ICC அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளில் இந்த தயாரிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன."தரமான பொருளே தாரக மந்திரம்: ரகுநாதன் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty