அநாவசிய அழைப்புகளை தடைசெய்யும் Truecaller
27-10-2014 07:04 PM
Comments - 1       Views - 3215

வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இலங்கையில் தனது மொபைல் appஐ அண்மையில் அறிமுகம் செய்திருந்த Truecaller, இலங்கையில் தனது மில்லியன் கணக்கான பாவனையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கக்கூடிய சூழல் காணப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, Truecaller ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகியவற்றின் பதில் தலைவரான காரி கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் முன்னெடுத்திருந்த நேர்காணலின் விபரம் வருமாறு,
 
கேள்வி: Truecaller இன் பின்னணி என்ன?
Truecaller என்பது பாவனையாளர்களுக்கு தமக்கு அவசியமான அழைப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், உலகின் மாபெரும் டெலிபோன் பெயர் பட்டியலை கொண்ட மொபைல் app ஆகும். Truecaller என்பது மொபைல் சூழலை மிகவும் பாதுகாப்பானதாக பேணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரியாத ஒருவர் உங்களை அழைக்கிறார் என நீங்கள் எண்ணினால், அந்நபர் உங்களின் இலக்கத்தை எங்கிருந்தோ பெற்றிருக்க வேண்டும், அந்நபர் யார் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு.
 
கேள்வி:  டிஜிட்டல் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ளிகேஷன் எனும் வகையில் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? 
சர்வதேச ரீதியில் எமது வளர்ச்சியின் பின்னணியில், நாம் எமது பாவனையாளர்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து வருகிறோம். Truecaller என்பது உலகின் நபர்கள், வியாபாரங்கள் மற்றும் நிபுணர்களின் வெவ்வேறு தேவைகளை நன்கு அறிந்துள்ளது. மொபைல் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலாக அமைந்திருப்பது Spam (அநாமநேய அழைப்பு) ஆகும். குறிப்பாக மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் நிலையில். Truecaller ஊடாக பாவனையாளருக்கு கிடைக்கும் முக்கிய அனுகூலத்தில், அவர்களின் தொடர்பாடல்கள் விபரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதை அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடிவதுடன், தம்முடன் ஏனையவர்கள் தொடர்பு கொள்ளும் முறையை கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும். அவர்களுக்கு தமது மிகவும் பிரத்தியேகமான சாதனத்தை (தமது அலைபேசியை) அவசியமில்லாத அநாமநேய அழைப்புகளிலிருந்து தவிர்த்து வைத்துக் கொள்ள முடியும். அத்துடன், தமக்கு அழைப்பை மேற்கொள்ளும் நபர் தொடர்பில் விபரங்களை அறிந்து கொள்ள, Truecaller அவர்களுக்கு அழைப்பவரின் பெயரை தெரிவிக்கும். இதன் மூலம் நீண்ட காலமாக இழந்த நண்பர்களை கூட இனங்கண்டு கொள்ள முடியும். 
 
கேள்வி: சர்வதேச ரீதியில் அநாமநேய அழைப்புகளை மேற்கொள்பவர்களின் புள்ளி விபரங்கள் என்ன?
85 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை கொண்ட, Truecaller சர்வதேச ரீதியில் நாளாந்தம் 7 மில்லியன் அழைப்புகளை இனங்கண்டு தடைசெய்து வருகிறது. Truecaller ஊடாக பாவனையாளர்களுக்கு அதிகளவு அநாமநேய அழைப்புகளை மேற்கொள்ளும் இலக்கங்கள் தொடர்பான விபரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் பாவனையாளர்களுக்கு அநாமநேய அழைப்புகளை தடை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. Truecaller பாவனையாளர்கள் அநாமநேய அழைப்பை மேற்கொள்பவர்கள் தொடர்பிலான விபரங்களை அனுப்பி, முழு Truecaller சமூகத்துக்கும் பங்களிப்பை வழங்குகின்றனர்.
 
கேள்வி: இலங்கையில் பிரவேசிக்க நீங்கள் தீர்மானித்தது ஏன்?
இலங்கையில் ஸ்மார்ட்ஃபோன்களின் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. அத்துடன் அவர்கள் தொழில்நுட்ப ரீதியில் அதிகளவு அறிவு படைத்தவர்களாக மாறி வருகின்றனர். இந்தியா என்பது எமது வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக காணப்பட்ட போதிலும், பேச்சு வழக்கின்  மூலமாக அண்டைய நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது. அதிகளவு வளர்ச்சியை எதிர்நோக்கும் சந்தையின் மீது நாம் கவனம் செலுத்த விரும்புகிறோம். 
 
கேள்வி: உள்நாட்டு சந்தை தொடர்பில் நீங்கள் பெற்றுக் கொண்ட உள்ளார்ந்த விடயங்கள் என்னென்ன?
இந்த ஆண்டு மாத்திரம் நாம் எமது பாவனையாளர்கள் தொகையை 10,000 இலிருந்து 70,000 எனும் தொகைக்கு அதிகரித்துள்ளோம். இதற்கு மேலாக 28,000 இலக்கங்கள் வரை இலங்கையிலிருந்து அநாமநேய இலக்கமாக எமக்கு முறையிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இலங்கையில் Truecaller என்பது பிரபல்யமடைவதற்கு சிறந்ததொரு உதாரணமாக இது அமைந்துள்ளது. 
 
கேள்வி: இந்த ஆப்ளிகேஷன் தொடர்பான விழிப்புணர்வை இலங்கை முழுவதும் கொண்டு செல்ல எவ்வாறு நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள்?
நாம் சர்வதேச நாமமாக இருந்தாலும், வெவ்வேறு சந்தைகள் மற்றும் கலாசார கட்டமைப்புகள் போன்வற்றை உள்நாட்டு மயமாக்குவது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம். ஒரு நாட்டைப் பற்றிய விபரங்களை பெற, எமது அணியில் இலங்கையை சேர்ந்தவரை நாம் கொண்டுள்ளோம். அதற்கு மேலாக, தன்னார்வ அடிப்படையில் வர்த்தக நாம தூதுவரையும் கொண்டுள்ளோம். இவற்றின் மூலம் இந்த சேவையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். 
 
நேர்காணல்: சேகர்
" அநாவசிய அழைப்புகளை தடைசெய்யும் Truecaller" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
A.C.Subramanian 27-07-2015 10:19 AM
Please send the above system (method ), install our mobile
Reply .
0
2
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty