இயேசுவுக்கு பரிசாக மாபெரும் மனித கிறிஸ்மஸ் மரம்
31-12-2014 01:30 AM
Comments - 0       Views - 375

கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் என்று ஜெர்மனியை கூறுவதுண்டு. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் புனித போனிபேஸ் என்பவர், ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது, மக்கள் அங்குள்ள ஓக் மரம் என்ற ஒன்றை வழிபட்டு வருவதை கண்டுள்ளார்.

அதைக்கண்டு கோபமடைந்த அவர், அந்தமரத்தை வெட்டி வீழ்த்த, அதனடியிலிருந்து உடனடியாக ஒரு கிறிஸ்மஸ் மரம் முளைத்து வளர்ந்ததாக கூறப்படும் கதையே, கிறிஸ்மஸ் மரம் குறித்து பெரும்பாலான மக்கள் சொல்லும் கதை.

அவ்வாறிருக்கையில், ஆண்டுதோறும் இயேசுகிறிஸ்த்துவின் பிறப்பைக் கொண்டாடும் விழாவான கிறிஸ்மஸ் தினத்துக்காக, அமெரிக்காவின் ஹாண்டுராஸ் நகரத்தின் மக்கள், மனித கிறிஸ்மஸ் மரமொன்i றசெய்து சாதனை படைத்துள்ளனர்.

இது உலகிலேயே மிகப்பெரிய மனித கிறிஸ்மஸ் மரம் என்ற கிண்ணஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளது. அதேபோல இயேசு கிறிஸ்த்துவுக்கு அந்நகர மக்களால் வழங்கப்பட்ட ஒரு பரிசு என்றும் இதனை கூறுகின்றார்கள்.

இந்த மரமானது 2,945 மனிதர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தொண்டர்கள், அரச ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த மரத்தை டெக்யூஸிக்யால்பவில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைத்துள்ளர்.

இச்சாதனையில் பங்குபற்றிய அனைவரும் கருப்பு, சிகப்பு மற்றும் பச்சை நிற ஆடைகளை அணிந்து கொண்டு வந்துள்ளனர்;. மேலும் மரத்தின் உச்சியில் நட்சத்திரமொன்றை அமைப்பதற்காக, மஞ்சள் நிற ஆடைகளிலும் வந்துள்ளனர்.

6 நிமிடத்துக்குள் இவர்கள் இந்தமரத்தை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தசாதனை கடந்தவருடம் ஆர்ஜன்டீனாவில் 1,982 பேரால் ஒன்று சேர்ந்து அமைக்கப்பட்ட மனித கிறிஸ்மஸ் மரசாதனையை முறியடித்துள்ளது.
 
"இயேசுவுக்கு பரிசாக மாபெரும் மனித கிறிஸ்மஸ் மரம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty