2011ஆம் ஆண்டுக்கான ராசிகளின் பலன்கள்
28-12-2010 09:12 PM
Comments - 3       Views - 12882

2011ஆம் ஆண்டுக்கான ராசிகளின் பலன்கள்


உங்கள் ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 7ஆம் வீட்டில் இந்த 2011ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவான் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் ஏற்றத்தை அடைவீர்கள். எந்தவித பிரச்சினை, எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் கேது 3இலும் ராகு 9இலும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றியும் உறவினர்கள் ஆதரவும் பெற முடியும். பணவரவு ஓரளவுக்கு திருப்திகரமாக அமைவதால் குடும்ப தேவைகள் சிறப்பாகவே பூர்த்தியடையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிப்படையாது. ஆண்டுக் கோளான குரு பகவான் 12ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத அளவு குடும்பத்தில் வீண் விரயங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்கள் அதனால் அலைச்சல் அதிகரிக்கும். 12ஆம் வீட்டில் சஞ்சரித்து பிரச்சினையை ஏற்படுத்தும் குரு பகவான் 08.05.2011 முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படும். பணவரவில் நெருக்கடி, முயற்சிகளில் தடை உண்டாகும். 16.05.2011 முதல் சர்ப்ப கிரகங்களான கேது 2இலும் ராகு 8இலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு, ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும். பணவிடயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சனிபகவான் சாதகமாக சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து வெற்றிபெறுவீர்கள்.

•    உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
•    கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.
•    கணவன் - மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும்.
•    நல்ல வரன் அமையும்.
•    தொழில், வியாபாரத்தில் சிறப்பான அபிவிருத்தியை அடைவீர்கள். கடினமான உழைப்பினால் பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். நிரந்தரமான வேலை வாய்ப்பு கிடைக்கும்.
•    மாணவ, மாணவியர் விளையாட்டுகளில் வெற்றி அடைந்து சாதனை படைப்பார்கள்.
•    கலைஞர்கள் புதிய சாதனை படைப்பீர்கள்.


நட்சத்திர பலன்கள்

அஸ்வினி : பண வரவு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பால் நல்ல பலன் கிடைக்கும். அனைத்திலும் வெற்றி உண்டாகும். மாணவர்கள் சாதனையில் வெற்றி அடைவீர்கள்.

பரணி : சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியம் நடைபெறும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் சேரும்.

கிருத்திகை : எடுக்கும் காரியத்தில் வெற்றியை உண்டாக்கும். தொழில் வியாபாரம் நன்றாக அமையும். திருமண சுபகாரியம் நடைபெறும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் அதிகமாகும். கலைஞர்களுக்கு புகழ் கூடும்.

அதிர்ஷ்டமான திகதி : 4, 9, 13, 28, 27
அதிர்ஷ்டமான கிழமை : செவ்வாய்
அதிர்ஷ்டமான நிறம் : இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டமான தெய்வம் : முருகன்
அதிர்ஷ்டமான கல் : பவளம்


பரிகாரம்
08.05.2011இல் குரு பகவான் ஜென்ம ராசிக்கு சஞ்சாரம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள குருவுக்கு பரிகாரம் செய்து - வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வழிபட்டு, ஏழை அந்தணர்களுக்கு முடிந்த உதவியை செய்யவும்.

16.05.2011இல் சர்ப்ப கிரகங்களான ராகு - கேது சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்திலும் பணவிடயங்களிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ராகு - கேது பரிகாரம் செய்து, ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.

இவ்வாறு பிரார்த்தனைகள் செய்வதன் மூலம் எற்படும் பாதிப்பை குறைத்து இன்பமாய் வாழலாம்.
 
உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்ஜம ஸ்தானமான 5ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் சுப செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவு லாபம் கிடைக்கும். 08.05.2011 முதல் குருபகவான் 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் சுபகாரியங்கள் கைகூடும் நிலை உண்டாகும். உடல் நலம் சிறப்பாக அமையும். மன அமைதி, மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உறுவாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாகும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். ஆண்டின் பாதிவரை சாதகமான பலன்களையே தரும்.

08.05.2011 முதல் குருபகவான் விரைய ஸ்தானத்தில் சஞ்சாரிக்க இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயற்படுவது அவசியம் தற்சமயம் சர்ப்ப கிரகங்களான ராகு - கேது 2இலும் 8இலும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற செயலாகும். 16.05.2011இல் ஏற்பட இருக்கும் ராகு - கேது மாற்றத்தால் 1இல் கேதுவும் 7இல் ராகுவும் சஞ்சாரம் செய்வது அனுகூலத்தை ஏற்படுத்தாது. எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. உங்கள் வாழ்வில் சில பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். தொழிலில் எதிரிகள் தொல்லை அதிகமாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நற்பலனை உண்டாக்கும்.

•    உடல் ஆரோக்கியம் சுமாராக அமையும். சில சமயத்தில் உஷ்ணத்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
•    கொடுக்கல் வாங்கலில் கை எழுத்து இடுவது, வாக்குறுதி தருவது போன்றவற்றை தவிர்க்கவும்.
•    பெண்களுக்கு வயிறு சம்பந்தமான நோய்கள் உண்டாகி மறையும். கணவன் - மனைவி இடையே சுமூகமான உறவுநிலை இருக்கும். திருமண சுபகாரியங்கள் நடைபெறும்.
•    தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை. முக்கியமான முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுக்கவும்.
•    மே மாதம் வரை தொழிலில் லாபம் கிடைக்கும்.
•    உத்தியோகஸ்தர்களுக்கு பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் தாமதமாகும்.
•    மாணவ மாணவியருக்கு கல்வியில் சோர்வு விலகி சுறு சுறுப்பு, வேகம் அதிகரிக்கும். விளையாட்டுகளில் கவனம் தேவை.
•    கலைஞர்களுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டிகள், பொறாமைகள் குறையும். எதிலும் நிதானம் தேவை.

நட்சத்திர பலன்கள்

கிருத்திகை: நிதானமாக செயல் பட வேண்டும். உடல் உபாதைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துப்போவது நல்லது. திருமண சுப காரியம் தாமதம் ஆகும்.

ரோகிணி: உடல் நலனில் கவனம் தேவை. பொருளாதாரத்தில் பணவரவு தாமதமாகும். தொழில் வியாபாரம் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து ஓரளவு லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மிருகசீரிடம்: உடல் நலம் சுமாராக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியம் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளை ஏற்படுத்துவர்.

அதிர்ஷ்டமான திகதி: 6, 15, 24
அதிர்ஷ்டமான கிழமை    : வெள்ளி
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை
அதிர்ஷ்டமான தெய்வம்: லட்சுமி
அதிர்ஷ்டமான கல்: வைரம்


பரிகாரம்   
சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் ஆண்டின் முற்பகுதியில் 2இலும் 8இலும் சஞ்சாரம் செய்வதும் 06.05.2011இன் பின்னர் 1இலும் 7இலும் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் ஏற்படக்கூடிய தீய பலன்களில் இருந்து நன்மைபெற ராகு - கேது பரிகாரம் செய்வதோடு  காளகஸ்திரி சென்று வருவது நல்லது. 08.05.2011 முதல் குருவுக்கு பரிகாரம் செய்து வியாழக்கிழமையில் தட்சணா மூர்த்தியை வழிபட்டு வருவதாலும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவதனாலும் பிரச்சினைகள் குறைந்து மேன்மை பெறலாம்.

உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் 4இல் சஞ்சாரம் செய்வதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறது. அதுமட்டுமன்றி குருபகவான் 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். சர்ப்ப கிரக ராகு, கேது 1இலும் 7இலும் சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகமாகும். பண வரவுகளிலும் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் மன நிம்மதி குறையக்கூடிய சம்பவங்கள் உருவாகலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடி அதிகமாகும். 08.05.2011 முதல் குருபகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் விலகி ஓடும், பண வரவில் உள்ள நெருக்கடி ஓரளவுக்கு குறையும். திருமண சுப காரியங்கள் நடைபெறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். 16.05.2011இல் ராகு - கேது பெயர்ச்சியினால் ராகு 6இல் சஞ்சாரம் செய்ய இருப்பதன் மூலம் தொழில், வியாபாரத்தில் உள்ள பிரச்சினைகள் மறையும், புதிய முயற்சிகள் வெற்றி அடையும். கடந்த காலங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உயர் பதவி கிடைக்கும்.

•    உடல் ஆரோக்கியம் சுமாராக அமையும். உஷ்ணம் சம்பந்தமான உடல் உபாதைகள் வரும். நிதானமாக செயல்பட வேண்டும்.
•    கொடுக்கல் வாங்கலில் சாட்சியாக நிற்பதை தவிர்க்கவும். சிலருக்கு கடன் தொல்லை குறையும்.
•    பெண்களுக்கு வயிறு கோளாறு யாவும் விலகி மனதில் அமைதி உண்டாகும், திருமண முயற்சி நிறைவேறும்.
•    தொழில், வியாபாரம் மந்தமான நிலை காணப்பட்டாலும் உங்கள் திறமையால் படிப்படியாக முன்னேற்றம், இலாபம் உண்டாகும்.
•    அரசு சார்ந்த உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வில் காலதாமதம் ஏற்படும். சிலருக்கு நல்ல தொழில் கிடைக்கும்.
•    மாணவ மாணவியர் விளையாட்டு, கல்வி போன்றவற்றில் படிப்படியாக வெற்றி அடைவார்கள். குடும்பத்தைவிட்டு வெளியூர், வெளிநாடுகளில் தங்கி படிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
•    கலைஞர்களுக்கு தொழில் ரீதியாக நெருக்கடிகள் உருவாகும்.


நட்சத்திர பலன்கள்

மிருகசீரிடம் : உடல்நிலை சுமாராக தான் இருக்கும். நிதானமாக செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

திருவாதிரை : மனைவி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் சுமாராக தான் இருக்கும். திருமண சுப முயற்சி சாதகமாக அமையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

புனர்பூசம் : தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். திருமண சுப காரியம் நடைபெறும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் அதிகமாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் படிப்படியாக தங்களுக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்டமான திகதி: 5, 14, 23
அதிர்ஷ்டமான கிழமை    : புதன்
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை
அதிர்ஷ்டமான தெய்வம்: விஷ்ணு
அதிர்ஷ்டமான கல்: மரகதம்


பரிகாரம்
அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நன்மையை தரும். 8.5.2011 முதல் குரு 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குருவுக்கு பரிகாரம் செய்வதோடு வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வழிபடுவதாலும் நடக்கும் நல்ல பலன்களில் மேன்மை உருவாகும்.

16.05.2011 முதல் ராகு 7ஆம் வீட்டிலும்; கேது ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுகாலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடுகளிலும் சர்பேஸ்வரர் வழிபாடுகளிலும் அதிக நம்பிக்கையுடன் ஈடுபடுவதால் மேலும் நல்ல பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.


உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் 3ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வது அற்புதமாகும். குருபகவானும் 08.05.2011 வரை 9ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு தாராளமாக பணவரவுகளும் பொருளாதார நிலையில் முன்னேற்றங்களும் சிறப்பாக அமையும். 16.05.2011இல் ராகுபகவான் 6ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது பலவகையில் நற்பலன்களை உண்டாக்கக்கூடிய அமைப்பாகும். உடல் நலம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சொத்துக்கள் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வெற்றியடைவார்கள். 08.05.2011 முதல் குருபகவான் 10ஆம் வீட்டில்  சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் கவனமாக இருக்க வேண்டும். 16.05.2011 முதல் ராகு- கேது 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு எல்லா லாபங்களையும் ஏற்படுத்தும். சனி பலமாக சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலம் அதிகரிக்கும். குருவால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

•    உடல் ஆரோக்கியம் நன்றாக தேறி சுறுசுறுப்பு கிடைக்கும். மனைவியும் பரிபூரண உடல் நலத்தை அடைவார். கொடுக்கல் வாங்கல்களில் முன்னேற்றம் உண்டாகும்.
•    திருமணம் ஆகாத பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும். ஆடை- ஆபரணம் சேரும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
•    தொழில் வியாபாரத்தில் மிகவும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும், உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் ஏற்படும், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
•    மாணவ மாணவியர் விளையாட்டு, கல்விபோன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். உயர் கல்வி கற்க ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.
•    கலைஞர்களுக்கு அதிர்ஷ்டமான காலம். அரச விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.


நட்சத்திர பலன்கள்

புனர்பூசம்: எடுக்கின்ற முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். எதிர்பாராத செய்திகள் நற்பலனை கொடுக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். தொழில், வியாபாரம் லாபம் தரும். திருமண தடை நீங்கும். ஆண்புத்திர பாக்கியம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் கிடைக்கும்.

பூரம்: சிறப்பான நல்ல பலனை ஏற்படுத்தும். திருமண சுப முயற்சி சாதகமாக அமையும். உடல் நலம் நன்றாக அமையும். பொருளாதாரநிலை சிறப்பாக அமையும். கடன் விலகும், புதிய வேலை நிரந்தரமாகும்.

ஆயில்யம்: உங்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். திருமண சுப காரியம் நடைபெறும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் அதிகமாகும். தனவரவினால் அசையாத சொத்துக்கள் வாங்க நேரிடும்.

அதிர்ஷ்டமான திகதி: 2, 11, 20, 29  
அதிர்ஷ்டமான கிழமை    : திங்கள்
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை
அதிர்ஷ்டமான தெய்வம்: வெங்கடாஜலபதி
அதிர்ஷ்டமான கல்: முத்து

பரிகாரம்
08.05.2011 முதல் குருபகவான் ஜீவ ஸ்தலமான 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால், குருபகவானுக்கு பரிகாரம் செய்வதாலும் வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வழிபடுவதாலும் நடக்கவிருக்கும் சிறந்த பலன்களால் மேலும் நன்மை பெறலாம்.

16.05.2011 முதல் ராகு 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் ராகு பரிகாரம் செய்வதும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவதும் நன்மையை தரும்.

ஏழரை சனியில் பாதி சனி நடைபெற்று கொண்டு இருக்கிறது. குருபகவானும் 08.05.2011 வரை  அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் இது சாதகமற்ற அமைப்பாகும். 16.05.2011 வரை  11ஆம் வீட்டில் கேது பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதனால் ஓரளவுக்கு எதையும் சமாளிக்க முடியும் என்றாலும் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். பணவரவு தேவைக்கு ஏற்றபடி அமைந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். மன நிம்மதி குறையும். 08.05.2011 முதல் குருபகவான் 9ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறையும், பொருளாதார நிலை உயர்வடையும், புத்திர பாக்கியம் உண்டாகும். கடன் சற்றே குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் சிறப்படையும். 16.05.2011இல் ராகு 4ஆம் வீட்டிலும் கேது 10ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு எல்லாவற்றிலும் லாபங்களை ஏற்படுத்தும். இந்த ஆண்டு இறுதியில் 20.12.2011இல் ஏற்பட இருக்கும் சனி மாற்றத்தினால் உங்களுக்கு ஏழரை சனி முழுவதும் முடிவடைவதினால் உங்கள் வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் தேடிவரும்.

•    உடல் ஆரோக்கியம் சுமாராக தான் அமையும். மருத்துவ செலவுகள் உண்டாகும். மனைவிக்கு உடல் சோர்வு ஏற்பட்டு விலகும்.
•    கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது கவனமாக செயல்பட வேண்டும். கடன் கொடுத்த பணத்தை மீள பெறுவீர்கள்.
•    பெண்களுக்கு திருமணம், சுப காரியங்கள் நடைபெறும் கணவன் - மனைவி உறவில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும்.
•    தொழில், வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். இந்த ஆண்டின் இறுதியில் ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும்.
•    உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகமாகும். புதிய வேலைக்கு தேர்ந்து எடுக்கப்படுவீர்கள்
•    மாணவ மாணவியர் மந்தமான நிலைவிட்டு முன்னேற்றம் காண்பார்கள்.
•    கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு தாமதித்தே கிடைக்கும்.

நட்சத்திர பலன்கள்

மகம்: இக்காலத்தில் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களே கிடைக்கும். அதிகமான தன வரவு இருந்தாலும் அவையாவும் செலவு ஆகிவிடும். தொழில், வியாபார நிலை படிப்படியாக அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவி உறவில் சிக்கல்கள் விலகும்.

பூரம்: கடந்தகால சோதனைகள் ஓரளவுக்கு குறையும், கடன் யாவும் படிப்படியாக விலகிவிடும். சிறப்பான நல்ல பலனை ஏற்படுத்தும். திருமண சுப முயற்சி சாதகமாக அமையும். உடல் நலம் நன்றாக அமையும், பொருளாதார நிலை சிறப்பாக அமையும், வாக்குறுதி தருவதை தவிர்க்கவும்.

உத்திரம்: உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் உள்ள காலம் இது. குடும்பத்தில் வருவாய்க்கு ஏற்ற செலவு உண்டாகும். சேமிக்க முடியாது. எடுக்கும் காரியம் யாவும் தாமதப்படும். தொழில், வியாபாரம் மந்தமாக நடைபெற்றாலும் லாபம் சுமாராக அமையும்.

அதிர்ஷ்டமான திகதி: 1, 10, 19, 28  
அதிர்ஷ்டமான கிழமை    : ஞாயிறு
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு, இளம் மஞ்சள்
அதிர்ஷ்டமான தெய்வம்: சிவன்
அதிர்ஷ்டமான கல்: மாணிக்கம்


பரிகாரம்
ஏழரை சனி தொடருவதால் சனிக்கு பரிகாரம் செய்து தினமும் காக்கைக்கு அன்னம் வைப்பதனாலும் ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த வரை உதவி செய்வதாலும் தோஷங்கள் குறைந்து நன்மை பெறலாம்.

8.5.2011 முதல் குருபகவான் அஷ்டமஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் குருவுக்கு பரிகாரம் செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வழிபடுவது, உத்தமம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெற்று கொண்டு இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்;. 08.05.2011 வரை குருபகவான் 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை உயரும். திருமண சுபகாரியம் நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம்; இல்லை, என்றாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். சர்ப்ப கிரகங்களான ராகு, கேது 16.05.2011வரை 4ஆம், 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுப காரிய நிகழ்ச்சிகளை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. பண விடயத்தில் கவனம் தேவை. தொழிலில் எதிரிகள் அதிகமாகும். நெருங்கியவர்களுக்கு உடல்நலம் பாதிக்கும். 16.05.2011இல் ராகு, கேது மாற்றத்தில் ராகு 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதிலும் எதிர்நீச்சல்போட்டு முன்னேறிவிடுவீர்கள்.

•    உடல் ஆரோக்கியம் சுமாராக தான் அமையும். மருத்துவ செலவுகள் உண்டாகும். உடல் நலம் சாதகமாக அமையாது. வண்டி, வாகனம் பயன்படுத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
•    கொடுக்கல் வாங்கல்களில்; ஈடுபடும்போது கவனமாக செயல்பட வேண்டும். அதிகமான நெருக்கடி ஏற்படும். பெரிய தொகையால் வீண் விரோதமும் அவமானமும் உண்டாகும்.
•    திருமணம், சுபகாரியங்களை சிலகாலம்; தள்ளிப்போடுவது நல்லது. கணவருக்கு உடல்நிலை சாதகமாக அமையாது. கணவன் - மனைவி உறவில் ஒற்றுமை குறையும்.
•    தொழில், வியாபாரத்தில் கடுமையான சோதனைகள் ஏற்படும். லாபம் குறையும். கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாறுதல் உண்டாக்கி குடும்பத்தைவிட்டு பிரிய வேண்டிய நிலை உருவாகும்.
•    மாணவ மாணவியருக்கு மந்தமானநிலை ஏற்படுவதோடு மதிப்பெண் குறையும். வீண் அலைச்சல் உண்டாகும்.
•    கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை இழக்க நேரிடும்.


நட்சத்திர பலன்கள்

உத்திரம்: வயிற்றுக்கோளாறு ஏற்படும், முயற்சி எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தடைப்பட்டு போகும். செலவுகள் கட்டுக்குள் அடங்காது, கடன் அதிகமாகும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அஸ்தம்: மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். எந்த காரியத்தை எடுத்தாலும் முடிக்க தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான சூழ்நிலை உருவாகும். உடல் நலம் பாதிக்கும், புத்திர வழியில் வீண்விரயம், பிரச்சினைகள் உண்டாகும். குடும்ப வாழ்வில் நிம்மதி குறையும்.

சித்திரை: உங்களுக்கு தேக நலனில் கவனம் தேவை. அதிக மருத்துவ செலவுகள் ஏற்படும்;. நெருங்கியவர்களிடம் பேசும்போது கவனம் தேவை, தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். பண வரவில் முடக்கம், மந்தநிலை தோன்றும்.

அதிர்ஷ்டமான திகதி: 5, 6, 8, 14, 19, 23, 27
அதிர்ஷ்டமான கிழமை    : புதன், ஞாயிறு
அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு, பச்சை
அதிர்ஷ்டமான தெய்வம்: விஷ்ணு
அதிர்ஷ்டமான கல்: மரகதம்


பரிகாரம்
ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவதால் சனிக்கு பரிகாரம் செய்து திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவதன் மூலம் தோஷங்களை குறைத்து நன்மை பெறலாம். 8.5.2011 முதல் குரு 8இல் சஞ்சாரம் செய்வதால் குருவுக்கு பரிகாரம் செய்து வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வழிபடுவதாலும் ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதாலும் மற்றும் சதுர்த்தி விரதம் மேற்கொண்டு விநாயக பெருமானை வழிபட்டுவர நற்பலன்களை பெறலாம். மனம் தளராமல் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வதன் மூலம் வாழ்வை செழிப்பாக மாற்றிக்கொள்ளலாம்.
 
ஏழரை சனியில் விரய சனி நடைபெற்று கொண்டு இருக்கிறது. 08.05.2011 வரை சனி பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும், போட்டிகள் உருவாகும். மறைமுக லாபங்கள் குறையும், கொடுக்கல் வாங்கலில் வீண் விரையங்கள் ஏற்படும். நெருங்கியவர்களிடம் பேசும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மந்தமானநிலை உருவாகும், தனரீதியாக முடக்கங்கள் ஏற்படும். சனி உங்கள் ஜென்ம ராசிக்கு யோககாரன் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. 08.05.2011 வரை குருபகவான் 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு சாதகமான பலனை உண்டாக்கும். இதனால் பணவரவு ஓரளவுக்கு இருக்கும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சுமாராக அமையும். 16.05.2011இல் ஏற்படும் ராகு, கேது மாற்றத்தின் மூலம் 2இல் ராகு 8ஆம் வீட்டில் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதால் கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து போவது நல்லது. நெருங்கியவர்களிடையே வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உணவு விடயத்தில் கட்டுப்பாடு அவசியம். பேச்சில் நிதானம் தேவை.

•    உடல் ஆரோக்கியம் சுமாராக தான் அமையும். வீண் விரயங்கள் உண்டாகும்.
•    கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. உடன் இருப்பவர்களே உங்களை ஏமாற்றுவார்கள். பணம் வருவதில் சிக்கல்கள் ஏற்படும்.  
•    பெண்களுக்கு சோர்வு நிலை காணப்படும். கணவரின் தொழிலில் மந்தமான நிலை உருவாகும். பிற்பகுதியில் திருமணம், சுபகாரியங்கள் நடைபெறும். கணவன் - மனைவி உறவில் ஒற்றுமை குறையும்.
•    தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் ஏற்படும், இலாபம் குறையும். வரவுக்கு மீறிய செலவு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாறுதலால் மன அமைதி குறையும். புதிய வேலைவாய்ப்பு கிட்டும்.
•    மாணவ மாணவியர் கடினமாக முயற்சி செய்து படித்தால் மட்டும் நல்ல  மதிப்பெண் பெறலாம். சில சமயத்தில் படிப்பதை மறந்துவிடுவீர்கள்.
•    கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும்.


நட்சத்திர பலன்கள்

சித்திரை: நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது அவசியம். அதிக மருத்துவ செலவு எற்படும். நெருங்கியவர்களிடம் பேசும்போது கவனம் தேவை, தொழில் மற்றும்; வியாபாரத்தில் பிற்பகுதியில்; முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறப்பு வழியில் ஒற்றுமை உண்டாகும்.

சுவாதி: தேகநிலை சீராக இருக்கும். மன தைரியத்தினால் எதையும் சமாளித்துவிடுவீர்கள், எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தடைப்பட்டுபோகும். செலவுகள் கட்டுக்குள் அடங்காது கடன் அதிகமாகும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை தரும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றத்தை சந்திக்க நேரிடும். புதிய வேலைக்கு முயற்சி எடுத்தால் கிடைக்கும்.

விசாகம்: நிறைய பொருள் வரவுகள் தருவதுபோல் தோன்றினாலும் அதற்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்பு எற்படும். மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும், எந்த காரியத்தை எடுத்தாலும் முடிக்க தாமதம் ஏற்படும். கணவன் - மனைவி ஒற்றுமை சுமாராகவே அமையும்.

அதிர்ஷ்டமான திகதி: 5, 6, 15, 18, 24, 29  
அதிர்ஷ்டமான கிழமை    : புதன், வெள்ளி
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை, பச்சை
அதிர்ஷ்டமான தெய்வம்: லஷ்க்மி
அதிர்ஷ்டமான கல்: வைரம்

பரிகாரம்
ஏழரை சனியில் விரய சனி நெடைபெறுவதால் சனிக்கு பரிகாரம் செய்து ஆஞ்சநேயரை வணங்கி வருவதும் திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவதாலும் நடக்கும் தோஷங்களையும் பாதிப்புக்களையும் குறைத்து நன்மை அடையலாம்.

08.05.2011 முதல் குரு சஞ்சாரம் செய்வதால் தட்சணாமூர்த்தியை வழிபடவும் இதனால் குரு பகவானால் வரக்கூடிய நற்பலன்களை பெறலாம். 16.05.2011இல் ராகு 2இலும் கேது 8இலும் சஞ்சரிப்பதால் ஏற்படும் தீயபலன்களில் இருந்து நன்மை பெற துர்க்கை அம்மனை வழிபாடு செய்து சர்ப்ப சாந்தி செய்வதும் தினமும் விநாயகரை வழிபடுவதாலும் மேன்மையை பெறுவீர்கள்.

உங்களுக்கு சனிபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் அற்புதமான நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார், நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருப்பதால் கடன் இல்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். பெரிய மனிதர்கள் நட்பும் எதிர்பாராத உதவிகளும் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும், கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும், புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களினால் நல்ல இலாபம் கிடைக்கும், ஆண்டின் முற்பகுதியில் ராகு, கேது 2இலும் 8இலும் சஞ்சரிப்பதால் கணவன் - மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், நெருக்கமானவர்களிடம் சில மன சஞ்சலங்கள், ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 16.05.2011இல் ஏற்பட இருக்கும் ராகு, கேது பெயர்ச்சியின் மூலமும் ராகு ஜென்ம ராசியிலும் கேது 7இலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இதுவும் சாதகமற்ற பலன்களையே ஏற்படுத்தும். 08.05.2011 முதல் குருவும் 6ஆம் வீட்டிற்கு செல்ல இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்களில் மிகவும் கவனத்துடன் நடப்பது நல்லது.

•    உடல் நலம் நன்றாக தேறி சுறுசுறுப்பு, வேகம், விவேகத்துடனும் நடந்து கொள்வீர்கள.; பரிபூரண வெற்றி உண்டாகும், மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
•    கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் விலகிவிடும். பெரிய மனிதர்கள் தொடர்பால் பல காரிய சாதனைகளை அடைவீர்கள்.
•    பெண்களுக்கு உடல் நலம் நன்றாக தேறிவிடும். குடும்ப வாழ்வில் மன நிம்மதி, கணவன் - மனைவி உறவில் அந்நியோன்யம் நிலவும். திருமண தடை நீங்கி இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியமும் அமையும்.
•    தொழில், வியாபாரத்தில் லாபமும் ஏற்றமும் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவடையும், பலருக்கு வேலை வாய்ப்புக்களை உண்டாக்கி தரும்.
•    உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட பதவி உயர்வுடன் கூடுதல் அதிகாரமும் பொறுப்பும் ஏற்படும். உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
•    மாணவ மாணவியர்கள் கல்வியில் முழு கவனத்தை செலுத்தி வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள். கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை படைப்பீர்கள்.
•    கலைஞர்களுக்கு கை நழுவிப்போன வாய்ப்புகள் அனைத்தும் கைகூடி வரும், எதிலும் வெற்றியை அனுகூலமாக தரமுடியும்.  

நட்சத்திர பலன்கள்

விசாகம்: புத்திர பாக்கியம் உண்டாகும், திருமண சுப காரியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுபீட்ஷம் உண்டாகும். வீடு, வண்டி, வாகன யோகம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகம் அடைவீர்கள். கணவன் - மனைவி உறவு சிறப்படையும்.

அனுஷம்: உடல் நலம் ஆரோக்கியமாக அமையும். வெற்றிகளும் ஏற்றங்களும் தொடர்ந்து இருக்கும், குடும்பத்தில் சுபீட்ஷம் உண்டாகும். பொருளாதார நிலையில் ஏற்றம் அடைவீர்கள், திருமண சுப முயற்சி சாதகமாக அமையும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கேட்டை: உடல் நலம் ஆரோக்கியமாக அமையும், தொழில், வியாபாரம் முன்னேற்றம்  அடையும். திருமண சுப காரியம் நடைபெறும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் அதிகமாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் படிப்படியாக சதாகமாக அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திகதி: 5, 9, 14, 18, 23, 27  
அதிர்ஷ்டமான கிழமை    : செவ்வாய், ஞாயிறு
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டமான தெய்வம்: முருகன்
அதிர்ஷ்டமான கல்: பவளம்


பரிகாரம்
ராகு, கேது சாதகமற்று சஞ்சாரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது, ராகு - கேதுவுக்கு பரிகாரம் செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதும் நல்லது. 08.05.2011 முதல் குரு 6ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குரு ப்ரீதி தட்சணாமூர்த்தியை வழிபடல் போன்றவற்றை செய்து வருவதன் மூலம் பாதிப்புகளை குறைத்து மன நிறைவை பெற்று கொள்ளலாம்.

உங்கள் ஜென்ம ராசிக்கு 10ஆம் வீட்டில் சனிபகவான்; சஞ்சாரம் செய்வதால் தொழில், உத்தியோக ரீதியாக இடையூறுகள் ஏற்படுத்தும் அமைப்பாகும். குருபகவான் 4ஆம் வீட்டில்  சஞ்சாரம் செய்கின்றார். இதனால் அலைச்சல் அதிகரிக்கும். ராகு ஜென்ம ராசியிலும் கேது 7ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் அனுகூலம் அற்ற பலனை உண்டாக்கும், இதனால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, குடும்பத்தில் மருத்துவ செலவு அதிகமாகும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். எடுக்கும் காரியங்களில் தடைகள் ஏற்படும், பணவரவு சுமாராக இருக்கும். நீங்கள் இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தாலும் 08.05.2011 முதல் குரு பஞ்சமஸ்தானமான 5ஆம் வீட்டிற்கு செல்ல இருப்பதால் உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகிப்போகும். தடைப்பட்ட சுப காரியங்கள் யாவும் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேரும். பண வரவு அதிகமாக இருப்பதால் கடன்கள் தீரும். 26.05.2011இல் ஏற்படவிருக்கும் சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது 6ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்டு வந்த எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். ஆண்டின் பிற்பகுதியில் ஏற்படும் குருவின் சாதகமான மாற்றத்தினால் எதையும் சமாளித்துக்கொள்வீர்கள்.

•    உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும், சில சமயம் சிறுசிறு உஷ்ண உபாதைகள் ஏற்படும்.
•    கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் ஏற்படும், பெரிய தொகைக்கு வாக்குறுதி தருவதை தவிர்க்கவும்.
•    கணவன் - மனைவி உறவில் சுமூக  நிலை ஏற்படும். திருமண தடை நீங்கி இந்த ஆண்டு பிற்பகுதியில் திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியமும் அமையும்.
•    தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம்; உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும், உயர் அதிகாரிகளின் நெருக்கடி கூடுதல் ஆகும்.
•    மாணவ மாணவியருக்கு கல்வியில் மந்தமானநிலை மாறி ஆர்வம் உண்டாகும்.
•    கலைஞர்களுக்கு இதுவரை நிலவிய மந்த நிலைமாறி படிப்படியாக நல்ல  வாய்ப்புகள் கிடைக்கும்.


நட்சத்திர பலன்கள்

மூலம்: இக்காலத்தில் சற்றே முன்னேற்ற நிலை அடைவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும், உடல்நிலை சீராக அமையும், புத்திர பாக்கியம் உண்டாகும். திருமண சுப காரியம் சிறப்பாக அமையும். சிறிதளவு பண வரவால் மனதில் உற்சாகம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபத்தை அடைவீர்கள் கணவன் - மனைவி விட்டு கொடுத்து வாழ்வார்கள்.

பூராடம்: உடல் நலம் சுமாராகவே அமையும். மருத்துவ செலவுகள் இருக்கும், கடன் குறையும். திருமண சுப காரியம் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் - மனைவி அனுசரித்து வாழ்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் குறையும்.

உத்திராடம்: உடல் நலம் சுமாராகவே அமையும். மருத்துவ செலவுகள் இருக்கும் தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபத்தை அடையும். திருமண சுப காரியம் நடைபெறும்.

அதிர்ஷ்டமான திகதி: 5, 9, 14, 18, 23, 27
அதிர்ஷ்டமான கிழமை    : செவ்வாய், ஞாயிறு
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டமான தெய்வம்: முருகன்
அதிர்ஷ்டமான கல்: புஷ்பராகம்


பரிகாரம்
ஜீவ ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் சனிபகவானுக்கு பரிகாரம் செய்யவும். ராகு, கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது, ராகு - கேதுவுக்கு பரிகாரம் செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதும் 08.05.2011 முதல் குரு 4ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குரு பரிகாரம் செய்து தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்வதாலும்  வருகின்ற பிரச்சினைகளை குறைத்து இன்பமாய் வாழலாம்.

உங்களுக்கு ராசி அதிபதி சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை உண்டாக்கும். ஆண்டின் முற்பாதியில் கேது பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறும் ஆற்றலை பெறுவீர்கள். 08.05.2011 வரை குரு 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். இதனால் எடுக்கும் காரியங்களில் தடை,  பண வரவில் தாமதம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நலம். சுப காரியங்களிலும் இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. 08.05.2011 முதல் குரு 4ஆம் வீட்டிற்கு செல்ல இருப்பதால் ஓரளவுக்கு நற்பலனை உண்டாக்கும். 16.05.2011இல் ஏற்படவிருக்கும் சர்ப்ப கிரக மாற்றத்தால் ராகு 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து முன்னேற்றம் அடைய முடியும்.

•    உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். மனதில் குழப்பங்கள், சஞ்சலங்கள் ஏற்பட்டு விலகும்.
•    கொடுக்கல் வாங்கலில் சற்று சாதகமான பலனை உண்டாக்கும்;. பெரிய தொகைக்கு வாக்குறுதி தருவதை தவிர்க்கவும்.
•    பெண்களுக்கு உடல் நலத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாக்கும். கணவன் மற்றும் குடும்பத்தில் உள்ளவரை அனுசரித்து போவது நல்லது. திருமணம், சுப காரியத்தில் சற்று தாமதம் ஏற்படும்;. குழந்தை பாக்கியம் தாமதமாக அமையும்.
•    தொழில், வியாபாரம் சுமாரான லாபம்; உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். உடன் இருப்பவர்களினால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் நெருக்கடி கூடுதல் ஆகும்.
•    மாணவ மாணவியருக்கு கல்வியில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றி கிடைக்கும்.
•    கலைஞர்களுக்கு இதுவரை நிலவிய மந்தநிலை மாறி படிப்படியாக நல்ல  வாய்ப்புகள் கிடைக்கும்.


நட்சத்திர பலன்கள்

உத்திராடம்: உடல் நலம் சுமாராகவே அமையும். மருத்துவ செலவுகள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்தமானநிலை நிலவும், ஓரளவுக்கு லாபம் அடையும்.  திருமண சுப காரியம் தாமதமாக நடைபெறும். காரியங்கள் அனைத்தும் படிப்படியாக சதாகமாக அமையும், எதிலும் நிதானம் தேவை.

திருவோணம்: உடல்நலம் சுமாராகவே அமையும். மருத்துவ செலவுகள் இருக்கும். திருமண சுபகாரிய நிகழ்ச்சி நடைபெறும், தொழில் வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் அடையும். கணவன் - மனைவி உறவு ஓரளவுக்கு திருப்தி அடையும்.

அவிட்டம்: உடல் நலம் சுமாராகவே அமையும். படிப்படியாக முன்னேற்றம் அடையும். தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபத்தை அடையும். திருமண சுப காரியம் நடைபெறும். காரியங்கள் அனைத்தும் படிப்படியாக சதாகமாக அமையும்.

அதிர்ஷ்டமான திகதி: 1, 5, 10, 14, 19, 23
அதிர்ஷ்டமான கிழமை    : புதன், வெள்ளி
அதிர்ஷ்டமான நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான தெய்வம்: ஐயப்பன்
அதிர்ஷ்டமான கல்: கரு முத்து, நீலகல்


பரிகாரம்
குருபகவான் சாதகமின்றி சஞ்சாரம் செய்வதால் குரு பரிகாரம் செய்து வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது. 16.05.2011இல் கேது 5இல் சஞ்சாரிப்பதால் கேதுவுக்கு பரிகாரம் செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவதால் வாழ்வில் இன்பம், நல்ல பலனை உண்டாக்கும்.

உங்களுக்கு அஷ்டமசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ஆண்டின் தொடக்கத்தில் குரு 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ராகுபகவான் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உன்னதமான நற்பலன்கனை ஏற்படுத்தக்கூடியது. குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்கள் கூட சாதகமாக இருப்பார்கள்;. 08.05.2011 வரை குரு 3ஆம் வீட்டில்  சஞ்சாரம் செய்கின்றார். இதனால் எடுக்கும் காரியங்களில் தடை எற்படுத்தும் அமைப்பாகும், எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாகும், பணவரவில் நெருக்கடிகள் அதிகரிக்கும். 16.05.2011இல் ஏற்படவிருக்கும் சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது 4இலும் ராகு 10ஆம் வீட்டி சஞ்சாரம் செய்வதால் தொழில் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தும். வண்டி, வாகனத்தில் விரையம் ஏற்படுத்தும், சுபகாரியம் ஏற்பட தடை ஏற்படும்.

•    உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை காணப்படும்.
•    கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்பட வேண்டும்.
•    பெண்களுக்கு உடல் நலத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். திருமண சுப காரியம் முற்பகுதியில் ஏற்படும். குழந்தை பாக்கியம் தாமதமாக அமையும். வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படும்.
•    தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம்; உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும்.
•    உத்தியோகஸ்தர்கள் கவனமாக செயல் பட வேண்டும். உயர் அதிகாரிகளின் நெருக்கடி கூடுதல் ஆகும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாகும், உடன் இருப்பவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும்.
•    மாணவ மாணவியருக்கு கல்வியில் மந்தநிலை விலகி படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்பட்டால் தேர்வில் வெற்றிபெற முடியும்.
•    கலைஞர்களுக்கு தொழில் ரீதியாக போட்டிகள், பொறாமைகள் உண்டாகும். இசை, பாடல் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயரும் பாராட்டும் அமையப்பெறும்.


நட்சத்திர பலன்கள்

அவிட்டம்: உடல் நலம் சுமாராகவே அமையும். படிப்படியாக முன்னேற்றம் அடையும். தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபத்தை அடையும். திருமண சுபகாரியம் நடைபெறும். காரியங்கள் அனைத்தும் படிப்படியாக சாதகமாக அமையும். கணவன் - மனைவியிடையே சிறிதளவு ஒற்றுமை குறைவு ஏற்படும்.

சதயம்: உடல் சோர்வு படிப்படியாக குறையும். மருத்துவ செலவுகள் இருக்கும். திருமண சுபகாரிய நிகழ்ச்சி நடைபெறும். அழகிய புத்திர பாக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் அடையும். கணவன் - மனைவி உறவு சுமாராக அமையும்.

பூரட்டாதி: உங்களுக்கு இக்காலகட்டத்தில் ஓரளவு நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். நெருக்கமானவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும். தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபத்தை அடையும். திருமண சுப காரியம் நடைபெறும். காரியங்கள் அனைத்தும் படிப்படியாக சாதகமாக அமையும். கடன் சற்று குறையும்.

அதிர்ஷ்டமான திகதி: 8, 17, 26
அதிர்ஷ்டமான கிழமை: சனி
அதிர்ஷ்டமான நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான தெய்வம்: ஐயப்பன்
அதிர்ஷ்டமான கல்: நீலக்கல்


பரிகாரம்
சனி 8இல் சஞ்சரித்து அஷ்டம சனி நடைபெறுவதால் சனிக்கு பரிகாரம் செய்து, திருநள்ளாறு சென்று வரவும். குருபகவான் 08.05.2011 முதல் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குரு பரிகாரம் செய்து வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. 16.05.2011 முதல் ராகு - கேது சாதகமின்;றி சஞ்சாரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்து துர்க்கை வழிபாடு, தினமும் விநாயகரை வழிபடுவது நல்ல பலனை உண்டாக்கும்.
உங்கள் ராசிக்கு அதிபதி குரு, ஜென்ம ராசியில் ஆண்டின் முற்பகுதியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனிபகவான் ஜென்ம ராசிக்கு 7ஆம் வீட்டில் சஞ்சாரித்து கண்டக சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது 4இல் ராகு 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் மேலும் உங்களுக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. ஆண்டின் முற்பகுதியில் நீங்கள் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். 08.05.2011 வரை குரு 2ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு மேன்மையான பலனை உண்டாக்கும். திருமண சுப காரியங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் அடைவீர்கள். கொடுத்த கடன் தடையின்றி வசூல் ஆகும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் அடைவீர்கள். 16.05.2011இல் சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது 3இல் சஞ்சாரம் செய்கின்றார், எந்த பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.

•    உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.
•    கொடுக்கல் வாங்கலில் சற்றே நிதானமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகளை எளிதாக சமாளிக்க வேண்டும்.
•    கணவன் - மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடு உண்டாகும். திருமண சுப காரியம்; ஏற்படு;ம், குழந்தை பாக்கியம் அமையும்.
•    தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம்; உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும்.
•    உத்தியோகஸ்தர்கள் கவனமாக செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளின் நெருக்கடி கூடுதல் ஆகும். உத்தியோகத்தில்; உடன் இருப்பவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும்.
•    மாணவ மாணவியருக்கு கல்வியில் மந்தநிலை விலகி படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்பட்டால் தேர்வில் நல்ல மதிபெண் பெற முடியும்.
•    கலைஞர்களுக்கு வாய்ப்புகளில் சிறப்பானநிலை ஏற்படும். தொழில் ரீதியாக போட்டிகள், பொறாமைகள் உண்டாகும்.


நட்சத்திர பலன்கள்

பூரட்டாதி : உங்களுக்கு இக்காலகட்டத்தில் ஓரளவு நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். நெருக்கமானவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும். படிப்படியாக முன்னேற்றம் அடையும் தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபத்தை அடையும்.  திருமண சுப காரியம் நடைபெறும். காரியங்கள் அனைத்தும் படிப்படியாக சதாகமாக அமையும். கடன் சற்று குறையும்.

உத்திரட்டாதி : குடும்ப வாழ்வில் சிறிது மன அமைதி குறைவு ஏற்படும். உடல் சோர்வு படிப்படியாக குறையும். மருத்துவ செலவுகள், இருக்கும் கடன் குறையும். திருமண சுப காரிய நிகழ்ச்சி நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் அடையும். கணவன் - மனைவி உறவு சுமாராக அமையும்.

ரேவதி : தேக நிலையில் சற்றே அலைச்சல் உண்டாகும். நெருக்கமானவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும். மனைவி, புத்திர வழியில் சிறிது அக்கறை எடுக்க வேண்டும். தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபத்தை அடையும். திருமண சுப காரியம் நடைபெறும். காரியங்கள் அனைத்தும் படிப்படியாக சாதகமாக அமையும். கடன் சற்று குறையும்.

அதிர்ஷ்டமான திகதி: 3, 12, 21, 30
அதிர்ஷ்டமான கிழமை : வியாழன்
அதிர்ஷ்டமான நிறம்: பொன்நிறம்
அதிர்ஷ்டமான தெய்வம்: தட்சணாமூர்த்தி
அதிர்ஷ்டமான கல்: புஷ்பராகம்


பரிகாரம்
குருபகவான் 08.05.2011 முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் குரு பரிகாரம் செய்வது மிகவும் நல்லது. சனி 7இல் சஞ்சாரம் செய்வதால் சனிக்கு பரிகாரம் செய்யவும். 16.05.2011 முதல் ராகு - கேது கேந்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்து துர்க்கை வழிபாடு நல்ல பலனை உண்டாக்கும். மனம் தளராமல் நம்பிக்கையுடன் பிரார்த்தனைகளை செய்வதன் மூலம் வாழ்வை செழிப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

"2011ஆம் ஆண்டுக்கான ராசிகளின் பலன்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (3)
SELVAMALAR 01-01-2011 08:46 AM
மிகவும்சந்தோசம் ஒவ்வொரு வாரமும் அனுபவும் வீசகம் 3
Reply .
2
1
Gayathiri Thurrairaj 03-06-2011 02:17 PM
நான் உங்கள் பலன்களை பார்த்தேன். நான் பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ரசி, ரிஷப லக்னம், இப்பொழுது எனக்கு, புதன் திசையில் ரகு புத்தி நடக்கிறது. புதன் பதில் வெள்ளியுடனும் சந்திரனுடனும் சேர்ந்து இருக்கிறார். ராகு பதினொன்றில் சூரியனுடனும் சனியுடனும் சேர்ந்து இருக்கிறார். எனது காலம் இப்போ எப்படி? ரிஷப லக்னம், கேது ஐந்தில், வியாழன் நாளில், செவ்வாய் பன்னிரெண்டில். இது எனது ஜாதகம். நான் பிறந்தது இருபத்தியேழு பங்குனி ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்தி எட்டில் . எனது காலம் எப்படி என்று சொல்ல முடியுமா சார்.
Reply .
1
1
M. SIVANANTHAM 25-07-2011 09:30 PM
M. SIVANANTHAM
MEENA RASI
UTHIRATATHI NATCHATTHIRAM

MIGAVUM ARUMAIYAGA KANIKKAPPATTU ULLATHU... MIKKA NANRI
Reply .
2
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty