இன்றைய பலன்கள் (03.02.2015)
03-02-2015 12:14 AM
Comments - 0       Views - 78

இன்றைய பலன்கள் (03.02.2015)

மேடம்
பிறருடைய தவறுக்கு நீங்க பழி ஏற்க வேண்டி இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் கவனத்துடன் இருப்பது அவசியம். மாணவர்களுக்கு திறமைக்குரிய உயர்வு தேடி வரும். 
அஸ்வினி : துன்பம் 
பரணி : ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நலம் 


இடபம்
வார்த்தைகளில் இனிமை அவசியம். மருத்துவ சோதனைகள் செய்வது நலம். சுபகாரிய தடைகள் படிப்படியாக விலகும். 
கிருத்திகை 2, 3, 4: செலவு 
ரோகிணி : மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: இன்பம் 


மிதுனம் 
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். யாரோடும் வீண் வாக்குவாதம் வேண்டாம். செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். 
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி 
திருவாதிரை: இன்பம் 
புனர்பூசம்: லாபம்


கடகம்
கஷ்டங்கள் படிப்படியாக விலகும். வாகனப் பயணங்களில் வேகம் தவிர்க்கவும். குடும்பத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். 
புனர்பூசம்: இன்பம்
பூசம்: முயற்ச்சி
ஆயில்யம்: துன்பம் 


சிம்மம்
பேற்றோர் உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். முதன் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உண்டாகலாம். 
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்


கன்னி
பிறருடைய கட்டாயத்திற்காக புதியதாக எதையும் செய்ய வேண்டாம். பணியாளர்கள் யாரையும் பகைக்காமல் இருப்பது நல்லது. விஷப் பூச்சிக்கடிகளில் அலட்சியம் கூடாது. 
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: துன்பம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: கஷ்டம்


துலாம்
புதிய தொழில் அமைப்புகள் கைகூடி வரும். வரவுகள் அதிகரித்தாலும் சுப செலவுகள் கூடவே வரும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டாகும். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி 
சுவாதி : இன்பம்
விசாகம் 1, 2, 3: வெற்றி  


விருட்சிகம்
பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் மகிழ்ச்சி நிலவும். வர்த்தகத்தில் சில சங்கடமான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்புகள் உயர்ந்தாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். 
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: தடை
கேட்டை: கஷ்டம்  


தனுசு
ஆன்மீகத்தில் நீண்ட நாளைய ஆசையை நிறைவேற்றுவீர்கள். குடும்ப பெண்களுக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொலைதூர பயணங்கள் சாதகமாக அமையும். 
மூலம்: மகிழ்ச்சி 
பூராடம்: இன்பம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்


மகரம்
தொல்லை கொடுத்து வந்த கடன்கள் முடிவுக்கு வரும். தொழிலில் அமைதியும் கவனமும் அவசியம். புதிய தொழில் அமைப்புகள் கைகூடும். 
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி 


கும்பம்
அலுவலகத்தில் செல்வாக்குள்ள பொறுப்புகள் கூடி வரும். எதிர்பார்க்கும் லாபம் குறைபடாது. உடன் பிறந்தவர்களுக்கு பண உதவி செய்து சமயத்துக்கு உதவியாக இருப்பீர்கள். 
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி 
சதயம் : உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
புதிய பணிகளில் அதிக ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். பணவரவுகள் கைக்கு வந்து சேரும். புதிய ஆடைகளும் வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்குவீர்கள். 
பூரட்டாதி 4: மகிழ்ச்சி 
உத்திரட்டாதி : இன்பம் 
ரேவதி : மகிழ்ச்சி

"இன்றைய பலன்கள் (03.02.2015)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty