இன்றைய பலன்கள் (06.02.2015)
06-02-2015 03:46 PM
Comments - 0       Views - 92

இன்றைய பலன்கள் (06.02.2015)

மேடம்
புதிய நண்பர்களிடத்தில் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் அனைவரிடமும் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும். உடல் நலத்தில் சிறிது குறைபாடுகள் காணப்படும். 
அஸ்வினி : குழப்பம்
பரணி  : துக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
திருமண நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிகரமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வெளிநாட்டுப் பொருட்கள் பரிசாக கிடைக்கும். 
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : வெற்றி
மிருகசீரிடம் 1, 2 : மகிழ்ச்சி


மிதுனம் 
தேவையற்ற செலவுகளைக் குறைப்பது அவசியம். குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பணம் களவு போகும் வாய்ப்புக்கள் உள்ளன. எனவே கவனம் அவசியம். 
மிருகசீரிடம் 2, 3: செலவு
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: நஷ்டம்


கடகம்
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்;கள் கையெழுத்தாகும். பணத்தட்டுப்பாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அமைதியான போக்குகள் காணப்படும்.  
புனர்பூசம்: ஆர்வம்
பூசம் : இன்பம் 
ஆயில்யம்: கவனம்

சிம்மம்
விலை உயர்ந்த பொருட்கள் பரிசாக கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 
மகம்: இன்பம் 
பூரம்: அமைதி
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


கன்னி
வியாபாரத்தில் கடினமாக உழைத்து முன்னேற்றம் அடைவீர்கள். தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். சுப காரியங்கள் நடைபெறும். 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம் 
சித்திரை 1, 2ஆம் பாதம் : இன்பம்


துலாம்
பெரியவர்களிடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்வது அவசியம். எந்த சூழலிலும் உங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்த வேண்டாம் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையடன் பழகுவது நல்லது. 
சித்திரை 3, 4ஆம் பாதம் : சிக்கல்கள்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3 : பயம்


விருட்சிகம்
பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் வருமானத்தை அதிகரிக்கலாம்  குடும்பத்தில் அன்பு மேலோங்கும். 
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: வெற்றி


தனுசு
உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகமாகும். உறவினர்களிடம் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் ஏமாற்றங்கள் உண்டாகலாம். 
மூலம்: ஏமாற்றம் 
பூராடம் : பிரச்சினை
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்


மகரம்
வியாபாரத்தில் புதிய வழிகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை நடைபெறும். கலைஞர்கள் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். 
உத்திராடம் 2, 3, 4: செலவு 
திருவோணம்: மகிழ்ச்சி 
அவிட்டம் 1, 2: இன்பம்


கும்பம்
குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புக்கள் வந்து நீங்கும். பயணங்கள் அலைச்சல் உடையதாகவே அமையும். யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.
அவிட்டம் 3, 4: அலைச்சல்
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: துக்கம் 


மீனம்
பொது வாழ்வில் உள்ளவர்கள் மக்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் சீராக செல்லும். பிரிந்த உறவுகள் ஒன்று கூடும்.
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

"இன்றைய பலன்கள் (06.02.2015)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty