இன்றைய பலன்கள் (16.02.2015)
16-02-2015 04:44 PM
Comments - 0       Views - 53

இன்றைய பலன்கள் (16.02.2015)

மேடம்
தொழில் சம்மந்தமான பிரயாணங்கள் நல்லதொரு லாபத்தைக் கொடுக்கும். சுற்றுலா செல்லும் இடங்களில் நல்ல சுவையான உணவுகளை உண்பீர்கள். இல்லத்தில் உறவினர்களின் வருகை காணப்படும். 
அஸ்வினி : இன்பம் 
பரணி : மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: லாபம் 


இடபம்
சில வேண்டாத பேச்சுக்களால் பகை உண்டாகும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. தொழிலாளர்களிடையே பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.  
கிருத்திகை 2, 3, 4: சிக்கல்கள் 
ரோகிணி : துன்பம் 
மிருகசீரிடம் 1, 2: பகை


மிதுனம் 
நல்ல காரியங்கள் செய்வதற்கான பேச்சுக்கள் நடைபெறும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கைகள் உண்டாகும். 
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: உற்சாகம்
புனர்பூசம்: இன்பம் 


கடகம்
குலதெய்வ வழிபாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மகிழ்ச்சியான செய்திகள் இல்லம் தேடி வரும். 
புனர்பூசம்: இன்பம் 
பூசம் : துக்கம்
ஆயில்யம்: மகிழ்ச்சி  


சிம்மம்
குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சி கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பொழுது போக்குகளில் ஈடுபடும் பொழுது  கவனம் தேவை.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: பயணம்
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்


கன்னி
இடமாற்றத்தின் மூலம் மனதில் சில சங்கடங்கள் உண்டாகும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. தேவையில்லாத பயங்கள் மனதில் தோன்றும். 
உத்திரம் 2, 3, 4: பயம்
அஸ்தம்: துக்கம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்


துலாம்
இல்லத்தில் சகோதர, சகோதரிகளின் வருகை காணப்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் மகிழ்ச்சி நல்ல இனிமையான உறக்கம் ஆகியவை கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி : இன்பம்
விசாகம் 1, 2, 3: இன்பம்


விருட்சிகம்
தேவையில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும். பெண்களுடன் விவாதங்கள் ஏற்படும். மற்றவர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு துன்பப்படலாம். கவனம் அவசியம்.  
விசாகம் 4: துக்கம் 
அனுசம்: துன்பம்
கேட்டை: பிரச்சினை


தனுசு
இடமாற்றம் மனதில் மகிழ்ச்சியை தரும். வெளியிடங்களுக்கு சென்று உணவு உண்பீர்கள். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். 
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


மகரம்
பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளுடன் பிரச்சினை. வேண்டாத உணவுகளால் வயிற்றில் தொந்தரவுகள்  ஆகியவைகள் காணப்படும். இல்லத்தில் உள்ள பெரியவர்களின் சந்திப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: பிரச்சினை
திருவோணம்: சந்திப்பு
அவிட்டம் 1, 2: துன்பம்


கும்பம்
தொட்டது துலங்கும். அரசினரால் ஆதாயங்கள் மற்றும் அனுகூலங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தனலாபம் கிடைக்கும். காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். 
அவிட்டம் 3, 4: லாபம்
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி


மீனம்
இல்லத்தில் தெய்வீக வழிபாடுகளுக்கு உண்டான பேச்சுவார்த்தைகள் நடைபெயும். நீண்ட நாளை நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் பரிசாக கிடைக்கப்பெறலாம்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி 
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : லாபம்

"இன்றைய பலன்கள் (16.02.2015)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty