சற்குரு ஸ்ரீ தியாகராஜசுவாமிகளின் 168 ஆவது ஆராதனை நிகழ்வு
21-02-2015 03:11 PM
Comments - 0       Views - 53

-நா.நவரத்தினராசா


இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் வட இலங்கை சங்கீத சபையின் எற்பாட்டில், மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபையின் தற்பரானந்தன் அரங்கில் சற்குரு ஸ்ரீ தியாகராஜசுவாமிகளின் 168 ஆவது ஆராதனை விழா இன்று சனிக்கிழமை (21) நடைபெற்றது.


வட இலங்கை சங்கீத சபையின் தலைவரும் யாழ்ப்பாணம் கல்வி வலய கல்விப் பணிப்பாளருமான செ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை சங்கீத சபையின் உபதலைவர் கலாபூசணம் சு.கணபதிப்பிள்ளையும் ஆசியுரையை நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ  சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளும் வழங்கினார்கள்.


இந்நிகழ்வின் இசை ஆராதனையை யாழ்ப்பாணத்தின் முன்னணி சங்கீத கலைஞர்கள் நிகழ்த்தினர்.  

"சற்குரு ஸ்ரீ தியாகராஜசுவாமிகளின் 168 ஆவது ஆராதனை நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty