'இரத்தின தீபம்' விருது விழாவின் ஸ்தாபகருக்கு பாராட்டு விழா
23-02-2015 01:47 PM
Comments - 0       Views - 35

-மொஹொமட் ஆஸிக்

மலையக கலை கலாசார சங்கத்தினால் கடந்த 20 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் 'இரத்தின தீபம்' விருது விழாவின் ஸ்தாபகரும் சினிமா, நாடகக் கலைஞருமான ராஜா ஜென்கின்ஸ்சின் கலையுலக சேவையைப் பாராட்டும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை (22) கண்டியில் நடைபெற்றது.

கண்டி, மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் ஒழுங்கு செய்த இப்பாராட்டு விழாவில், மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஆர். ராஜாராம் பிரதம அதிதியாகவும் கிரிக்கெட் வீரர் முரளிதரனின் தந்தை எஸ். முத்தையாவும் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

ராஜா ஜென்கின்ஸ்சுக்கு ஊடகவியலாளர்கள் சார்பாக சட்டத்தரணி ஏ.எம்.வைஸ் பென்னாடை போர்த்தினார். அதிதிகள் பொற்கிழி வழங்கி கௌரவித்ததுடன், அந்தனி ஜீவா மற்றும் எஸ். சிவக்குமார் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

"'இரத்தின தீபம்' விருது விழாவின் ஸ்தாபகருக்கு பாராட்டு விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty