துரைவி நினைவுப்பேருரையும் விருது வழங்கல் நிகழ்வும்
24-02-2015 11:45 AM
Comments - 0       Views - 45

இலங்கை பதிப்புத்துறைக்கு பெரும் பணியாற்றிய துரைவி என அன்புடன் அழைக்கப்படும் அமரர் துரை விஸ்வநாதனின் 84 ஆவது பிறந்தி தின நினைவுப்பேருரையும் துரைவி விருது வழங்கல் நிகழ்வும் எதிர்வரும் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

எழுத்தாளர் திரு லெ.முருகபூபதி தலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வரவேற்புரையை மேமன்கவி நிகழ்த்தவுள்ளார். 

துரைவி நினைவுப்பேருரையை திரு எம்.வாமதேவன் ''மலையக புனைவு இலக்கியத்தின் தற்காலபோக்கை பற்றி ஓர் அவதானிப்பு '' எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வில், 2014ஆம் ஆண்டு வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல் ஒன்றுக்கும் கட்டுரைத் தொகுப்புக்கும் துரைவி விருது வழங்கி வைக்கப்படவுள்ளது.

நன்றியுரையினை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்தவுள்ளதோடு நினழ்ச்சியினை மல்லியப்பு சந்தி திலகர் தொகுத்தளிக்கவுள்ளார்.

 

"துரைவி நினைவுப்பேருரையும் விருது வழங்கல் நிகழ்வும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty