காட்டில் ஓர் கதை நூல் வெளியீடு
24-02-2015 02:39 PM
Comments - 0       Views - 78

காடும், காடு சார்ந்த முல்லை மண்ணில் 'காட்டில் ஓர் கதை நூல்' வியாழக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ளது.
வள்ளுவர்புரம் யோ.புரட்சியின் மாற்றங்காணும் அரங்குகள் வரிசையில் 'ஆஷா நாயும் அவளும்' எனும் இச்சிறுகதை நூல் வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள காட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்வுக்கு கற்சிலைமடு பாடசாலை அதிபர் சி.நாகேந்திரராசா தலைமை தாங்கினார். நூலுக்கான நயவுரையியை கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் வழங்கினார். முதற் பிரதியை கற்சிலைமடு பாடசாலை அதிபர் சி.நாகேந்திரராசா வழங்கி வைக்க வடமாகாண சபை உறுப்பினர் சி.சிவமோகன் பெற்றுக்கொண்டார்.

ஏற்கெனவே வள்ளுவர்புரத்தில் பாடசாலை மர நிழலில் 'இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' எனும் கவிநூலையும் முல்லைத்தீவு கடற்பரப்பில் மிதக்கும் படகுகளில் 'எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' எனும் கவிதை நூலினையும் வெளியிட்ட இக்கவிஞர் 'ஆஷா நாயும் அவளும்' எனும் இந்நூலினையும் பிரசவித்துள்ளார்.

 

"காட்டில் ஓர் கதை நூல் வெளியீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty