இரட்டையர்களை பிரித்து மருத்துவர்கள் சாதனை
25-02-2015 12:31 PM
Comments - 0       Views - 945

உலகில் எத்தனை பேர் எத்தனை சாதனைகள் படைத்தாலும் மருத்துவ உலகின் சாதனை அளப்பரியது.

அந்த வகையில், ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்து, மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனையை வைத்தியர்கள் நிலைநாட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலேயே இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

எலிஸ், ஜோன் எரிக் என்ற தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கினாட்டலி மற்றும் எடலின் பெய்த் மாடா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன.

எனினும் இவர்களின் நெஞ்சு பகுதி ஒட்டிய நிலையிலேயே காணப்பட்டுள்ளது. இது குழந்தையின் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கருதினர்.

ஆனால், இவ்விரு குழந்தைகளின்  மார்பு சுவர், நுரையீரல், இதயத்தை சுற்றி இருக்கும் சவ்வு வை (இதயம் புறணி), கல்லீரல், குடல், பெருங்குடல் மற்றும் இடுப்பு என்பவை வேறுவேறாகவே காணப்பட்டன.

இந்நிலையில்,  26 மருத்துவர்கள், 12 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 6 மனோதத்துவ நிபுணர்கள், 8 அறுவை சிகிக்சை செவிலியர்கள் ஒன்று கூடி,  26 மணித்தியால போராட்டத்தின் பின்னர் ஒட்டிப்பிறந்த குழந்தைகளை வெவ்வேறாக பிரித்து எடுத்தனர்

மருத்துவ வாழ்க்கையில் இதுவே நாம் செய்த முதலாவது பெரிய சிகிச்சை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"இரட்டையர்களை பிரித்து மருத்துவர்கள் சாதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty