'கலை, கலாசார விழா - 2015'
24-03-2015 05:11 PM
Comments - 0       Views - 207

-ஏ.எம்.ஏ.பரீத்

அரசின் 100 நாட்கள்; வேலைத்திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை, கலாசார விழா - 2015 மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வீ.யூசுப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக் கலந்து கொண்டார்.

பிரதேசத்திலுள்ள வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவு, விஷேட தேவையுடையவர்களுக்கான சக்கரக்கதிரைகள் வழங்கப்பட்டதுடன் கர்ப்பிணிகளுக்கு 2,000 ரூபாய் பெறுமதியான பொதிகளும் வழங்கப்பட்டன.

பிரதேச மட்டத்தில் கலை, கலாச்சார போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், உதவி தவிசாளர் எம்.எச்.ஹாஜா முகைதீன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், மூதூர் பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஏ.தாஹீர் மற்றும் சமூக மட்டத் தலைவர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

"'கலை, கலாசார விழா - 2015'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty