உலகில் அதிக காலம் வாழ்ந்த பெண்
05-04-2015 07:47 PM
Comments - 0       Views - 326

உலகில் அதிக காலம் வாழ்ந்த பெண்ணாக டுட்டி யுசுபோவா விளங்குகிறார். உஸ்பெகிஸ்தானியைச் சேர்ந்த இவர் சில தினங்களுக்கு முன்னே இறைபதம் அடைந்தார்.

இறக்கும்போது இவருக்கு வயது 135. இவர், 1880 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1 ஆம் திகதி பிறந்ததாக இவரது பிறப்பட்சாத்தி பத்திரம், கடவுச்சீட்டு என்பன உறுதிபடுத்தியுள்ளன. இதனை அந்நாட்டு அரசாங்கமும் ஏற்றுகொண்டுள்ளது.

உலகில் இதுவரை மிக வயதான பெண்ணாக கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த மிசாவோ ஒக்காவா கடந்த புதன்கிழமை தனது 117 ஆவது வயதில் காலமானார். ஆனால், மிசாவோ ஒக்காவாவை விட 17 வருடங்கள் மூத்தவராக  டுட்டி யுசுபோவா கருதப்படுகிறார்.

இதன்படி, பிரான்ஸின் ஈபிள்கோபுரத்தை விட 8 வருடங்கள் மூத்தவராக யுசுபோவா வாழ்ந்துள்ளார்.

உலகில் மிக நீண்ட காலம் உயிர்வாழக்கூடிய மக்கள் தொகையை கொண்ட நாடாக உஸ்பெகிஸ்தானி விளங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இங்கு வாழும் 30 மில்லியன் மக்கள் தொகையில் 8,700 பேர் நூறு வயதை தாண்டியவர்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

"உலகில் அதிக காலம் வாழ்ந்த பெண்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty