நாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா
07-05-2015 06:29 PM
Comments - 0       Views - 244

-எஸ். பாக்கியநாதன்

நாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலய மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (7) மட்டக்களப்பு நகருக்கு வருகை தந்தனர்.

அறிவைப் பெறுவதற்காக புத்தகத்தில் உள்ள பாடங்களைப் படிப்பது மட்டுமன்றி பாடங்களில் படிப்பவற்றை நேரடியாகப் பார்ப்பதன் மூலம் இலகுவில் மாணவர்களிடத்தில் பதிவதனால் இத்தகைய கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு வந்ததாக மாணவர்களை அழைத்து வந்த பொறுப்பான ஆசிரியைகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்டு மரபுரிமைமிக்க இடங்களான டச்சுக் கோட்டை, மட்டக்களப்பு கேற், வில்லியம் ஓல்ட்டின் உருவச் சிலை, சாரணிய ஸ்தாபகர் பேடன் பவலின் உருவச் சிலை, மகாத்மா காந்தியின் உருவச் சிலை, சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலை, வானிலை அவதான நிலையம், நகர வாசிகசாலை, காந்திப் பூங்கா, நீரூற்றுப் பூங்கா, யூனியர் பூங்கா, பாலமீன்மடு வெளிச்ச வீடு என்பவற்றைப் பார்வையிட்டதாகத் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள குறித்த மரபுரிமை மிக்க இடங்களின் முக்கியத்துவங்கள் பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெளிவுபடுத்தினர்.

 

"நாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty