இன்றைய பலன்கள் - 17.05.2015
17-05-2015 12:00 AM
Comments - 0       Views - 253

இன்றைய பலன்கள் - 17.05.2015

 

மேடம்
சிலர் உங்களை தமக்கு சாதகமாக செயல்பட விரும்புவர். விலகி  வருவதால் சிரமம் தவிர்க்கலாம். தியானம் தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்
அஸ்வினி: சிக்கல்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி

 

இடபம்
மற்றவர்களுடைய பேச்சு சங்கடங்களைக் கொடுக்கும். வியாபாரத்தில் நிறைவேற வேண்டிய முக்கிய பணி நிறைவேறும். எதிர்பார்த்திருந்த சுப செய்திகள் வந்து சேரும்.
கிருத்திகை 2, 3, 4: கவலை
ரோகிணி : இன்பம்
மிருகசீரிடம் 1, 2: வரவு

 

மிதுனம்
மனதில் அன்பும் கருணையும் அதிகரிக்கும். இயலாதவர்களுக்கு உதவி புரிந்து சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: தனலாபம்
புனர்பூசம்: நலம்

 

கடகம்
வாழ்வியல் அனுபவத்தை நண்பரிடம் சொல்வீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் வெகுவாக குறையும். முக்கிய வீட்டு உபயோகப்பொருட்களை வாங்குவீர்கள்.
புனர்பூசம்: இன்பம்  
பூசம்: மகிழ்ச்சி
 ஆயில்யம்: அக்கறை

 

சிம்மம்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படும். வளர்ச்சி நிலை படிப்படியாக உயரும். பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம்.
மகம்: தாமதம்
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்

 

கன்னி  
இயன்ற அளவில் உதவிகளை செய்து அன்பை வளர்ப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அளவான மூலதனம் செய்வீர்கள். விலையுயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாள்வது அவசியம்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: இலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்

 

துலாம்
மனதிலும் உடலிலும் புத்துணர்வு ஏற்படும். நிலுவைப் பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: வரவு

 

விருட்சிகம்
உடல் நலத்தில் தகுந்த அக்கறை வேண்டும். செயல்களில் அதிக கவனம் கொள்வது சிரமம் தவிர்க்க உதவும். முக்கிய செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும்.
விசாகம் 4: கவனம்
அனுசம்: இன்பம்
கேட்டை: செலவு

 

தனுசு
நல்லவர்களின் ஆலோசனையை ஏற்று மகிழ்வீர்கள். மனதில் உற்சாகமும் செயல்களில் திறமையும்  அதிகரிக்கும். புதிய யுக்தி பயன்படுத்தி வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள்.
மூலம்: வெற்றி
பூராடம்: மகிழ்ச்சி
 உத்திராடம் 1ஆம் பாதம்:  தனலாபம்

 

மகரம்
அனுபவ ஞானம் உணர்ந்து செயல்படுவதால் பணிகள் சிறப்பாகும். பணிநேரம் கூடுதலாகும். முக்கிய தேவைகளுக்கு பணக்கடன்கள் பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: முயற்சி
திருவோணம்:  இன்பம்  
அவிட்டம் 1, 2: கடன்

 

கும்பம்
சமூக நடப்பில் புதிய அனுபவம் பெறுவீர்கள். படிப்பினை கவனத்தில் நிறுத்தி செயல்களில் ஈடுபடுவீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும்.
அவிட்டம் 3, 4 : நலம்  
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்

 

மீனம்
குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். வளர்ச்சிப் பணிகள் இனிதே நிறைவேறும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: இன்பம்

"இன்றைய பலன்கள் - 17.05.2015" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty