வாயை மூடி கேட்கவும்: கேட்டுவிட்டு வீசவும்
27-05-2015 12:57 PM
Comments - 0       Views - 1015

தொலைபேசி அறிமுகமான ஆரம்பக்கட்டத்தில், தங்களது வீட்டுக்கு தொலைபேசி வசதி வேண்டும் என்று 8 பேர் மாத்திரமே விண்ணப்பித்திருந்துள்ளனர். ஆனால் தற்போது தொலைபேசி வசதி இல்லாதவர்களே இல்லை எனலாம். அபிவிருத்தி அடையாத பகுதிகளிலுள்ள சில வீடுகளில் இந்த வசதி இல்லாவிடினும் நிச்சயமாக அலைபேசி வசதி இருக்கும். இந்த அளவுக்கு அலைபேசி மக்களின் வாழக்கைக்கு ஒரு தொல்லை பேசியாகவே மாறி வருகின்றது.

இந்த முன்னேற்றங்களுக்கு பல தொழில்நுட்பவியலாளர்கள் உதவி செய்துள்ளார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

இந்த வகையில், அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் ராண்டிஸ் லிசா ராண்டி அல்ட்ஸ்சல் என்பவர், கடதாசியில் அலைபேசியொன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

2 முதல் 3 அங்குலம் வரையான நீளம் கொண்ட இந்த அலைபேசி 3 கடனட்டை அளவுக்கு பாரமுடையதாம். இது மீண்டும் அழித்து விட்டு தயாரிக்க கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அலைபேசியில் மறுமுனையில் இருந்து ஒருவர் பேசுவதை கேட்க மட்டுமே முடியும். பதிலுக்கு மீண்டும் பேச முடியாது. இதில் 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரம் மட்டுமே கேட்க முடியும்.

அதன்பின்னர் அதை அப்படியே வீசிவிட வேண்டியதுதானாம். அதன் பின்னர் அதில் பேச முடியாது. அந்த அலைபேசி மிகவும் மெலிதாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட அளவுவுக்கு இழுத்து வைத்து பேச முடியுமாம்.

ஆனால், இந்த அலைபேசியில் கேட்டு முடித்ததும் குப்பை கூடையில் வீசாமல், கடையில் திருப்பி கொடுத்தால் அதற்கு சிறு தொகை பணத்தை பெற்றுக்கொள்ளவும் முடியுமாம்.

அதன் தயாரிப்பு தொழில்நுட்பத்தை, அல்ட்ஸ்சல் நியூஜெர்சியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு அந்த பெண் வழங்கியுள்ளாராம்.

"வாயை மூடி கேட்கவும்: கேட்டுவிட்டு வீசவும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty