இந்தவார பலன்கள் (31.05.2015 - 06.06.2015)
31-05-2015 12:00 AM
Comments - 1       Views - 174

இந்தவார பலன்கள் (31.05.2015 - 06.06.2015)

 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்

தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களே காணப்படுகின்றன. இந்த வாரம் சுபகாரியங்கள் இனிதே கைகூடும். தகுதிக்கு ஏற்ற பதவி உயர்வுகள் உண்டாகலாம். குடும்ப நலம் சீராகும். சோம்பல்களால் தேவையில்லாத காலதாமதம் உண்டாகலாம். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.  வியாபார விடயமாக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். மனமாற்றம் உண்டாகும். தேவையில்லாத விரயம் உண்டாகலாம் எனவே பயணத்தில் கவனம் அவசியமாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியமாகும். இந்த வாரம் கவனமாக இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திபதி: 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)

 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1 - 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் தொடக்கத்தில் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வியாபாரத்தில் வருமானம் சீராகும். அரசியல் துறையில் ஏற்றம் பெறுவீர்கள். பொருள் வரவு சரளமாகும். தான தர்ம பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம். ஆனாலும் வார இறுதியில்  யாரையும் நம்பி கடன் தரமால் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே...!    
        
இந்த வாரம் நட்பால் நன்மை உண்டாகும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. தேவையான பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். பொருளாதார நிலைகளில் வளர்ச்சி உண்டாகும். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவிய சிலரை சந்திப்பீர்கள். அயல் நாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். மனமாற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். செலவுகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி;

 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்
 
மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் தொடக்கத்தில் உங்கள் அந்தஸ்த்து உயரும். எச்சரிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்;. பெண்களுக்கு நன்மை உண்டாகும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். எந்த காரியத்தையும் துரிதமாக செய்ய நினைப்பீர்கள். நண்பர்கள் நல்ல யோசனை சொல்வார்கள். ஆனால் வார இறுதியில் தகுந்த ஓய்வும் தேவை. வாடிக்கையாளர்களின் எதிர்ப்பைக் கண்டு அச்சம் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட சிம்மம் ராசி அன்பர்களே...!

இந்த வாரம் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வளர்ச்சிக்கான விடயங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. வரவுக்கு மீறிய செலவு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகும். ஆனாலும் தெய்வ பலத்தால் தீமைகள் விலகும். பெரியவர்கள் பக்க பலமாய் இருந்து வருவார்கள். தள்ளிப்போட்ட காரியங்களை இனிதே முடிப்பீர்கள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார விரோதம் விலகும். மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். பூர்வீக சொத்துக்களால் இலாபம் உண்டு. வார தொடக்கம் தீமையாக இருந்தாலும் வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



உத்திரம் 2, 3, 4, அஸ்தம் சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம் வீடு, நிலம் போன்ற விடயங்களில் ஆதாயம் உண்டு. உங்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். புதிய தொழிலுக்கு அஸ்த்திவாரமிடுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். எதையும் யாரிடமும் நாசூக்காக சொல்வது நல்லது. தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவு உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகள் மேலோங்கும். இந்த வாரம் செலவுகள் இருந்த போதிலும் நன்மையான பலன்களே அதிகம் காணப்படுகின்றன.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடி சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்துக்காக முழு முச்சாக செயற்படும் துலா ராசி அன்பர்களே...!     

இந்த வாரம் அரசு வகை காரியங்கள் அனுகூலமாக முடியும். பொருள் வரவு உண்;டாகும். வரவு செலவுகளில் கவனமாக இருக்கவும். தொட்டகாரியம் துலங்கும் நாள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள்.வரவேண்டிய நிலுவைத் தொகை வந்து சேரும். கூட்டு முயற்ச்சி வெற்றி பெறும். திருமண பேச்சு வார்த்தைகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. இறைவழிபாட்டின் மூலம் மகிழ்ச்சி காணலாம். எனவே இந்த வாரம் செலவுகள் இருந்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே! எடுத்த காரியத்தை முடிக்ககூடிய ஆற்றல் பெற்ற விருட்ச்சிக ராசி அன்பர்களே...!
                                  
இந்த வாரம் குழந்தைகள் நலன் விருத்தியாகும். வியாபாரம் மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள். விரயங்கள் அதிகமாகாமல் இருக்க கவனம் அவசியம். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். அடகுப்பொருட்களை மீட்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் இலாபம் இரட்டிப்பபாகும். அனுசரிப்பின் மூலம் அமைதி காணலாம். வருங்கால நலனுக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். வருமானம் உயரும். தொழிலுக்கு உறுதுணையான தகவல்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்



மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் பண வரவு சரளமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு கூடும். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். பொது வாழ்வில் புகழ் கூடும். தெய்வ நம்பிக்கை பலன் தரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து வரும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். செய்தொழில் சிறக்கும். மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்வது நல்லது. நெடுநாள் ஆசை நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மதிப்பும் மரியாதையும் உயரும நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பங்கள் விலகும். ஆனாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திகதி: 2
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

 

உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

அவனின்றி ஒரு அனுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே...!

இந்த வாரம் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள். பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நாள். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களை மாற்றி அமைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரிக்க காரியம் அனுகூலமாகும். தனவரவு கூடும். இருந்த போதிலும் வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். புதிய தொழில் முயற்ச்சி வெற்றியை தரும்.தீயவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். புதிய தொழிலுக்கு அஸ்த்திவாரம் இடுவீர்கள். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பறம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள. பிள்ளைகளால் உதிரி வருமானம் கிடைக்கப்பெறுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். அடுத்தவர் நலனில் எடுக்கும் முயற்ச்சி வெற்றி தரும். செல்வ நிலை உயரும் நாள். யாரிடமும் பகை பாராட்டாமல் பழகுவது நல்லது. குடும்பத்தில் மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வளர்ச்சிக்கு உதவியவர்களை சந்திப்பீர்கள். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திபதி: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9- பாதங்கள்

தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயற்படும் பரந்த உள்ளம் கொண்ட மீன ராசி அன்பர்களே...!

இந்த வாரம் சங்கடங்களைக் குறைக்கும் ஆற்றல் கூடும். செய்யும் தொழிலில் மந்தமான போக்கு காணப்படும். ஆனாலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். நினைத்ததை நிறைவேற்ற தருணம் பார்த்து காத்திருப்பீர்கள். இல்லத்தில் தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். கடன் சுமை குறையும். சுபகாரியப்பேச்சுக்கள் முடிவாகி மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். தொழில் ரீதியாக எடுத்த முடிவு நல்ல பலன்களைத்தரும். உடன் பிறப்புக்கள் வகையில் ஆதரவுகள் கிடைக்கும். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, ஆரஞ்சு             
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)

"இந்தவார பலன்கள் (31.05.2015 - 06.06.2015)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
krishnakumar 03-06-2015 02:16 PM
super
Reply .
0
0




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty