அலைச்சறுக்கலில் சாதனை
21-06-2015 11:30 AM
Comments - 0       Views - 321

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஹன்டிங்டன் கடற்கரையில் அலைச்சறுக்கலில் ஈடுபட்ட குழு உலக சாதனை படைத்துள்ளது.

அலைச்சறுக்கு சம்பியன்கள் மற்றும் உள்ளூர் நட்சத்திரங்கள் அடங்கலாக 66பேர் கொண்ட குழுவே இச்சாதனையை படைத்துள்ளது.

இக்குழுவினர், 42 அடி நீளமான அலைச்சறுக்கு பலகையில் 12 செக்கன்களுக்கு அலைச்சறுக்கலில் ஈடுபட்டுள்ளனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 47பேர் கொண்ட குழு 10 செக்கன்களுக்கு அலைச்சறுக்கலில் ஈடுபட்டமையே சாதனையாக இருந்தது.

இந்த சாதனை முயற்சியை பார்வையிடுவதற்கு சுமார் 5,000பேர் ஹன்டிங்டன் கடற்கரையில் குழுமியிருந்தனர்.

"அலைச்சறுக்கலில் சாதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty