2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.நா அறிக்கையை நிராகரித்தது மியான்மார் இராணுவம்

Editorial   / 2017 மே 23 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோகிஞ்சா முஸ்லிம்கள் மீது, மியான்மார் இராணுவத்தினால் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று ஐக்கிய நாடுகள் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை, மியான்மார் இராணுவம், இன்று (23) நிராகரித்துள்ளது.   

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால், இவ்வாண்டு பெப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் எனக் கருதக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்ற, இனவழிப்பு என கருதப்படக்கூடிய நடவடிக்கையில், மியான்மாரின் பாதுகாப்புப் படைகள், பாரியளவிலான கொலைகளைப் புரிந்ததாகவும், ரோகிஞ்சாக்களை கூட்டு வன்புணர்வு க்குட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.   

இந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 18 குற்றச்சாடுகளில், 12 பிழையானவை என்று என்று கண்டுபிடிக்கப் -பட்டுள்ளதுடன், மிகுதி ஆறும் பொய்யானவை என்றும் சோடிக்கப்பட்டவை என்றும், பொய்களையும் கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டவை என உள்ளக இராணுவ விசாரணையின் முடிவில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .