2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் அதிக ஆசனங்களுடன் ஆட்சியின் பங்காளராக மாற வேண்டும்: ஹக்கீம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் காங்கிரஸ் அதிக ஆசனங்களுடன் ஆட்சியின் பங்காளராக மாற வேண்டும். அளுத்கமவில் இடம்பெற்ற கலவரத்தை நாம் மறந்துவிடவில்லை. அதன் பிறகாவது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்தை நீங்கள் உணர வேண்டுமென அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், செவ்வாய்க்கிழமை (04) தெரிவித்தார். 

களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் எதிர்காலத்தை வளமானதாக மாற்ற ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே முடியும். வெற்றி பெறுவது உறுதி என்றபோதிலும் அமையப்போகும் ஆட்சி பலமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் எமக்குத் தேவையானதை செய்ய முடியும். ஐந்து மாதங்கள் நாம், தகுதியான அரசாங்கமொன்றை நடத்தினோம். பல சேவைகளைச் செய்தோம். 

பெரும்பான்மை பலமில்லாத ஓர் அரசாக எதிர்கட்சியில் தங்கியிருக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. அவ்வாறு இல்லாது தனிப் பெரும்பான்மை அரசாக நாம் விளங்க வேண்டும்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போதுதான் சக்திமிக்க அரசியலை அனுபவிப்பதுக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.

ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறுவது நிச்சயமாகிவிட்டது. சம்பிக்க ரணவக்கவும் ராஜித சேனாரட்னவும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவது நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிறன்து. தோற்கும் கட்சியில் அவர்கள் போட்டியிடமாட்டார்கள்.

ஆகவே, நாம் ஒன்றிணைந்து களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .