இந்தியாவின் முதற்பெண்மணி மரணம்
18-08-2015 03:38 PM
Comments - 0       Views - 944

இந்தியாவின் முதற்பெண்மணியான சுவ்ராமுகர்ஜி மரணமடைந்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை 10.51 மணிக்கே அவர் மரணமடைந்தார்.

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவியான அவர், நீண்ட காலமாக நோயுற்றிருந்ததோடு, கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூச்சுத் திணறல் காரணமாகவே அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

இருதய நோயாளியான அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார். எனினும், சிகிச்சைகள் பலனளிக்காது, இன்று மரணமடைந்தார்.

'முதற்பெண்மணி ஸ்ரீமத் சுவ்ராமுகர்ஜி இன்று காலையில் காலமானார் என்பதை ஆழந்தகவலையுடன் அறிவிக்கின்றோம். அவர் தனது விண்ணக இடத்தை நோக்கிக் காலை 10.51 மணிக்குப் புறப்பட்டார்' என, ராஷ்ட்ரபதிபவன் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது.

1940ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி பிறந்த சுவ்ரா முகர்ஜி, பிரணாப் முகர்ஜியை ஜூலை 13, 1957இல் மணமுடித்திருந்தார்.

"இந்தியாவின் முதற்பெண்மணி மரணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty