2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 20

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

636: காலித் இபின் அல் வலித் தலைமையிலான அரேபிய படைகள் சிரியா, பலஸ்தீன் பிராந்தியங்களi பைஸான்டைன் பேரரசிடமிருந்து கைப்பற்றின.

1858: சார்ள்ஸ் டார்வின் இயற்கைத் தேர்வுமூலமான கூர்ப்புக்கொள்கையை வெளியிட்டார்.

1866:அமெரிக்க சிவில் யுத்தம் முடிவுற்றதாக அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் அறிவித்தார்.

1917: இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.

1940: சோவியத் செஞ்சேனையின் ஸ்தாபகத் தலைவரான லியோன் ட்ரொஸ்கி, மெக்ஸிகோவில் ஸ்டாலினின் முகவர் ஒருவரினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

1944: இரண்டாம் உலகப் போர் - ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.

1948: "இலங்கை குடியுரிமை சட்டம்" இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

1953: ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

1960:செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

1968: பனிப்போர் - 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.

1975: நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

1977: நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

1988: 8 வருடகால ஈரான் - ஈராக் யுத்தத்திற்குப் பின் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

1991: சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு எதிரான சதிப்புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சோவியத் நாடாளுமன்றத்திற்கு வெளியே சுமார் ஒரு லட்சம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நாடாளுமன்ற கட்டித்தை தாக்கினர்.

1991: எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.

1997: அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2002: ஸ்பெய்னில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 146 பேர் பலி.

2006: அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை - கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணாமல் போனார்கள்.

2006: நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .