2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பள்ளி செல்லும் பூனை

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது உரிமையாளரின் குழந்தைகளுடன் பள்ளிக்குச் செல்லும் பூனைக்கு பள்ளி நிர்வாகம் அடையாள அட்டை வழங்கியுள்ள விநேத சம்பவமொன்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தால் என்ற பெண், கடந்த 2009ஆம் ஆண்டு பூபா என்ற பூனையை தத்தெடுத்துள்ளார். அவரது மகன்கள் மேத்யூ, மார்க் ஆகியோர் அந்த பகுதியிலுள்ள லேலேண்ட் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பூபா வீட்டில் இருக்காமல் தினமும் பள்ளிக்கு சென்று வகுப்பறைகளில் அமர்ந்து பாடத்தை கவனிக்கிறது. பள்ளி திறக்கும் முன்பு முதல் ஆளாக அங்கு சென்று வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது பூபா.

தினமும் பள்ளிக்கு வரும் பூபாவை மாணவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அப்போது பள்ளி வளாகத்தில் சுற்றிக் கொண்டிருந்த பூபாவுக்கே முதலில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆம்பர் வளர்க்கும் பிற பூனைகள் வீட்டோடு இருக்கையில் பூபா மட்டும் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் பழகுவது அப்பகுதி மக்களை வியக்க வைத்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .